Wednesday, February 27, 2008

இல்லாமலின் இருத்தல்



வானம் முழுக்க நட்சத்திரங்கள்
நிறைந்திருந்தாலும்,
வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே
ஏங்கிக்கிடக்கிறது மனம்..

பத்தொன்பது கேள்விகளுக்கு,
சரியாய் விடையளித்தும்,
தவறவிட்ட இருபதாம் கேள்வியே
தேர்வறைக்குப் பின்னும்
தொடர்ந்து வருகிறது.

மாலைமுழுதும் அவளுடன்
இருந்தும் கூட,
அவள் சென்ற பிறகு,
அவள் அமர்ந்திருந்த பெஞ்சையே
வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,
இட்லியும் சாம்பாரும்
இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,
இந்நாள் ஏக்கமென்று..

எதிரியாய் கருதியவனின்
மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,
தவற விட்ட தருணங்களும்,
நழுவிப்போன நட்பின் கணங்களும்..

ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ?

கிடைக்கப்போவதில்லை
எனத் தெரிந்தே தேடுவது
பைத்தியக்காரத்தனமாய்த்
தெரியலாம்..

என்ன செய்ய..?
எத்தனை இருந்தாலும் கூட,
இல்லாமல் போவதிலும்,
அதன் இல்லாமை தரும் சோகத்திலும்,
அடையாளம் காணமுடியா முகமூடியோடு
ஏதோ ஒரு சுகம்
ஒளிந்திருக்கத்தான் செய்கிறது

40 comments:

Aruna said...

//என்ன செய்ய..?
எத்தனை இருந்தாலும் கூட,
இல்லாமல் போவதிலும்,
அதன் இல்லாமை தரும் சோகத்திலும்,
அடையாளம் காணமுடியா முகமூடியோடு
ஏதோ ஒரு சுகம்
ஒளிந்திருக்கத்தான் செய்கிறது//

இல்லாமல் போவதில் இத்தனை சுகமா?பேசாமல் இல்லாமலே போய் விடலாம் போலிருக்கிறது..
அன்புடன் அருணா

Anonymous said...


நழுவிப்போன நட்பின் கணங்களும்..
ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ


Arumaiya unarthi irukinga.

anbudan
Geetha

Bee'morgan said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அருணா.. :-) ஆமாம்.. அந்த இல்லாமையின் சுகத்தில் விளைந்ததுதான் இக்கவிதை..

Bee'morgan said...

நன்றி கீதா.. ்:-)

Divya said...

மிகவும் ரசித்தேன் ஒவ்வொரு வரிகளையும்,

மிக அருமையான, தெளிவான வார்த்தை உபயோகிப்பு அழகோ அழகு!!

\\புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,
இட்லியும் சாம்பாரும்
இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,
இந்நாள் ஏக்கமென்று..\\

என் மனதில் அடிக்கடி தோன்றும் ஏக்கம் இவ்வரிகள்!
அம்மா செய்யும் 'உப்புமா'விற்காக சண்டைபோட்டதை, இன்று அயல் நாட்டு வாழ்க்கையில் , நினைத்து வருந்தி ஏங்குகிறேன்!!

Maragathavalli Arunachalam said...

vaazhthukkal nanbarae...
idli sambhar varigalai kettal onsite poha venamo nu thonudhu...
simply superb...
indha unarvukku kavidhaigal padithadhu illai...
mudhalai vaasithen...

nanjaarnda vaazhthukkal...
thodarattum panee...

Bee'morgan said...

நன்றி திவ்யா.. :-) எனக்கும் அந்த அனுபவம் உண்டு. வீட்டில் உப்புமா செஞ்சா எனக்காக தனியா ஏதாவது பண்ணியே ஆகணும்..
அப்படியெல்லாம் அலும்பு பண்ணிட்டு, இப்போ நாங்களே சமைக்க ஆரம்பித்த பிறகு, உப்புமா செய்யும் போதெல்லாம் அந்த ஞாபகம்தான்.. :`(

Bee'morgan said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மரகதவள்ளி.. :)

RAJA said...

its good da ,but i dont get the idea behind the entire thing.its nice to read in simple tamil.nice one da..maybe i am leaving without completely savouring the juice of it.

Bee'morgan said...

இதில் பெரிய மறைபொருளெல்லாம் எதுவும் இல்லை டா.. படிக்கும் போது என்ன தோணுதோ அதேதான் இதன் பொருள்.. அழகியலைக் கொண்டாடும் நாம், நமக்கு அனுபங்கள் கற்றுத் தரும் சில தருணங்களை கொண்டாடத் தவறுகிறோம் என்பது என் கருத்து.. நாம் சோகமாக உணரும் சில நேரங்களில் கூட நமக்கும் தெரியாமல் ஏதேனும் ஒரு சுகம் அதில் ஒளிந்திருக்கக் கூடும்.. அவ்ளோதான்..

தென்றல்sankar said...

//மாலைமுழுதும் அவளுடன்
இருந்தும் கூட,
அவள் சென்ற பிறகு,
அவள் அமர்ந்திருந்த பெஞ்சையே
வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..//

மிகவும் ரசித்து படித்தேன்.நிதர்சனமான உண்மை.

tamizhppiriyan said...

//வானம் முழுக்க நட்சத்திரங்கள்
நிறைந்திருந்தாலும்,
வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே
ஏங்கிக்கிடக்கிறது மனம்..//

//புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,
இட்லியும் சாம்பாரும்
இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,
இந்நாள் ஏக்கமென்று..//

நான் ரசித்த வரிகள்...வாழ்த்துக்கள்..கவிதை அருமை.

நன்றி.

M.Rishan Shareef said...

//புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,
இட்லியும் சாம்பாரும்
இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,
இந்நாள் ஏக்கமென்று..

எதிரியாய் கருதியவனின்
மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,
தவற விட்ட தருணங்களும்,
நழுவிப்போன நட்பின் கணங்களும்..

ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ?//

அருமை நண்பரே :)

Bee'morgan said...

வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி தமிழ்ப்பிரியன்

Bee'morgan said...

வாங்க ரிஷான்.. நீண்ட நாட்களுக்குப்பின் வருகிறீர்கள். நன்றி. :)

வினையூக்கி said...

இருப்பதை விட இருந்திருக்கலாமோ என்பதுதான் சுவாரசியம். அருமையான வரிகள். வாழ்த்துகள்

வினையூக்கி said...

|| எதிரியாய் கருதியவனின்
மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,
தவற விட்ட தருணங்களும்,
நழுவிப்போன நட்பின் கணங்களும்..

ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ? || அருமை. எதிரியின் மரணம் எனபோடாமல் எதிரியாய் கருதியவனின் மரணம் எனப்போட்ட இடத்தில் தான் தங்களின் ஆளுமை தெரிகிறது. அருமை

Bee'morgan said...

நன்றி வினையூக்கி. :) உங்கள் போன்றோரின் கருத்துகள்தான் என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகின்றன..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எதிரியாய் கருதியவனின்
மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,
தவற விட்ட தருணங்களும்,
நழுவிப்போன நட்பின் கணங்களும்..//

very nice...

மிக அருமையான கவிதை நண்பா...எனக்கும் இந்த உணர்வ ஏற்பட்டிருக்கிறது

Bee'morgan said...

உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.. நன்றி ஞானியாரே.. !

Anonymous said...

generally, kaadhal thottal thaan

VAZHUM... success aanaa elloraiyum maathiri oru thirumana vaazhkkai
but thorttuponal thaan athu oru punithamanathaga thontum..

ungal kavithaiyum kidaikamal pokumpothu athai unarum manasu..

antha sokathil oru sukam..
sokatthai ninaithu ninaith sugam kaanum manitharkal..
nantaga irunthathu.. ungalin intha unmai..

anujanya said...

பிடித்தது. சோகத்தில் சிறிது சுகம் உள்ளது சில சமயங்களில் என்பதை மறுக்க முடியாது.

அனுஜன்யா

தமிழ் said...

/வானம் முழுக்க நட்சத்திரங்கள்
நிறைந்திருந்தாலும்,
வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே
ஏங்கிக்கிடக்கிறது மனம்..

பத்தொன்பது கேள்விகளுக்கு,
சரியாய் விடையளித்தும்,
தவறவிட்ட இருபதாம் கேள்வியே
தேர்வறைக்குப் பின்னும்
தொடர்ந்து வருகிறது.

மாலைமுழுதும் அவளுடன்
இருந்தும் கூட,
அவள் சென்ற பிறகு,
அவள் அமர்ந்திருந்த பெஞ்சையே
வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,
இட்லியும் சாம்பாரும்
இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,
இந்நாள் ஏக்கமென்று..

எதிரியாய் கருதியவனின்
மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,
தவற விட்ட தருணங்களும்,
நழுவிப்போன நட்பின் கணங்களும்..

ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ?

கிடைக்கப்போவதில்லை
எனத் தெரிந்தே தேடுவது
பைத்தியக்காரத்தனமாய்த்
தெரியலாம்..

என்ன செய்ய..?
எத்தனை இருந்தாலும் கூட,
இல்லாமல் போவதிலும்,
அதன் இல்லாமை தரும் சோகத்திலும்,
அடையாளம் காணமுடியா முகமூடியோடு
ஏதோ ஒரு சுகம்
ஒளிந்திருக்கத்தான் செய்கிறது/

எதை விடுவது
அருமையான வரிகள்

Bee'morgan said...

அனுஜன்யா, திகழ்மிளிர் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. :)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மீளநினைக்கக் கூட நேரமில்லாத வாழ்க்கையில் அந்தக் கணங்களை அழகாகப் பதிந்து செல்கிறது கவிதை.

MSK / Saravana said...

எந்த வரிகளை குறிப்பிடுவது..
வரி வரியாய் வலிகளும்..
கவிதையும்..

//வானம் முழுக்க நட்சத்திரங்கள்
நிறைந்திருந்தாலும்,
வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே
ஏங்கிக்கிடக்கிறது மனம்..//

:)

anujanya said...

சரவணன்,

பாலமுருகன் எனக்குப் பிடித்த பதிவர்களுள் ஒருவர். Lot of potential. இந்த வயதிற்கு நம்ப முடியா முதிர்ச்சி எழுத்தில். நான் கூட என் பெயரை சரவணன், பாலமுருகன் என்று தமிழ்கடவுள் பெயருக்கு மாற்றிவிடலாம் என்று யோசிக்கிறேன். அப்படியாவது தமிழ் வருகிறதா என்று பார்க்கலாம்.

அனுஜன்யா

Bee'morgan said...

@ சரவணன்: கருத்துக்கு நன்றி சரவணன்.
@அனுஜன்யா: எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. ஆனால், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்கையில் எனக்கே கொஞ்சம் பயமா இருக்கு. இன்னும் நிறைய போகணும்.. உங்கள் ஆதரவும் ஊக்கமும் இருந்தால், அதுவே என்னை இட்டுச்செல்லும். :) அப்புறமா, இந்த பேரை மாத்தற வேலையெல்லாம் வேணாம்.. இந்த பேரே நல்லா இருக்கு.. :o)

ச.முத்துவேல் said...

கிடைக்காத ஒன்றின் மேல்,அல்லது இழந்துவிட்ட ஒன்றின் மேல்தான் நமக்கு ஆர்வம் மிகுதியாயியிருக்கும் என்ற உண்மையை அழகான பதிவாய் கவிதையாய் இயற்றியுள்ளீர்கள்.அருமை.(கிட்டத்தட்ட இதே தலைப்பில் நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன்.ஆனால்,அது வேறு தளம்.மொக்கையும் கூட.)

Bee'morgan said...

@ ச.முத்துவேல்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. அப்படியே, உங்கள் பதிவின் இடுகையைத் தந்தால் நாங்களும் படிப்போம்ல..

கார்க்கிபவா said...

அது எப்படிங்க ஃபிப்ரவரியில் எழுதிய இந்த பதிவு மட்டும் அப்பப்ப சூடான இடுகைல வருது?

Bee'morgan said...

அட நான் என்னங்க பண்ண. எல்லாம் தொழில்நுட்பக் கோளாறுதான்.. இந்த பதிவுக்குப் பின், என் வேறெந்த பதிவும் தமிழ்மணத்தில் திரட்டமுடியவில்லை. ஒவ்வொரு முறை புதிய பதிவிடும் போதும், இடுகைகளைப் புதுப்பித்தால் , அது இந்த பதிவிலேயே வந்து நிற்கிறது. என்ன பிரச்சனைனும் தெரியல.. உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க கார்க்கி..

ச.முத்துவேல் said...

என்னுடைய தளத்தின் முகவரிthooralkavithai.blogspot.com.இடுகையின் தலைப்பும் இதுவே.முடிந்தால் பாருங்கள்.

Bee'morgan said...

முத்துவேல், தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.. இப்போதுதான் உங்களின் வலைப்பக்கத்தைப் பார்த்தேன்.. சிறப்பாக எழுதுகிறீர்கள்.. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்.. :)

Anonymous said...

well composed.

முரளிகண்ணன் said...

மீண்டும் பலமுறை படித்தேன். அருமை

செல்வ கருப்பையா said...

அற்புதமான கவிதை நண்பா!

Bee'morgan said...

@ dr.rudhran , செல்வ கருப்பையா :
நன்றிங்கோ.. :)
@முரளிகண்ணன்:
:-) மீண்டும் மீண்டும் நன்றிங்கோ.. :)

Priyadarshini said...

Simple language, effecient usage of words.. leads to unimaginaable imaginations.

Bee'morgan said...

நன்றி ப்ரியா.. :)