
எல்லைக்கோட்டின் இடைவெளியில் கால்பந்தாடும் சிறுவனாகட்டும்தன் தாத்தாவுடன் mobile ல் chess விளையாடும் அந்த பேரனாகட்டும், தன் குழந்தைக்காக நட்சத்திரங்களில் புள்ளி வைக்கும் அந்த தந்தையாகட்டும், அனைவருக்கிடையேயும் இழையோடுவது போன்ற ஏதோ ஒரு தனித்தன்மை, பார்க்கும் முதல் முறையே 'அட' போட வைக்கிறது.
உண்மையில் Google search காக பதின் வினாடிகளில் ஒரு Indiana Jones படத்தையே பார்த்தால் ஸ்பீல்பெர்கே ஆச்சரியப்பட்டுதான் போவார்.
பெயர் தெரியா அந்த விளம்பரக் கலைஞனின் உழைப்பையும் திறமையையும் நினைத்து பல முறை வியந்திருக்கிறேன். எப்படிப்பட்ட அசாத்தியமான வேலை இது.
கொடுக்கப்படும் சொற்ப வினாடிகளில், தான் சொல்ல வந்ததை சொல்லவேண்டிய கட்டாயமே எங்கும் விரவி நிற்கிறது. இந்த ரத்தினச் சுருக்கம் கைவரப்பெற்ற விளம்பரங்கள்தான் வாசகர்களின் கவனத்தைக் கவர்கின்றன.
ரொம்ப நாட்களுக்கு முன் Express Yourself என்ற வாசகத்துடன் கறுப்பு வெள்ளையில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரம் ஒன்று இன்னும் நினைவில் நிற்கிறது. ஒவ்வொரு உணர்ச்சியாக வரிசைப்படுத்தும் அவ்விளம்பரம் மிகப் பொருத்தமான பிண்ணனி இசையும், கன கச்சிதமான ஒளிப்பதிவுமாக முடிவடையும் வரை நம்மை செயலற்றுப் போகச் செய்யும். இவ்விளம்பரத்திற்காகவே கிரிக்கெட் இடைவேளைகளைக் கூட காத்திருந்து கவனித்த அனுபவம் உண்டு.
இன்று எதேச்சையாக இணையத்தில் அளாவிய போது, Airtel ன் இணைய தளத்தில் இவற்றை காண நேர்ந்தது..
இதோ airtel விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே
3 comments:
எனக்கும் AirTel விளம்பரங்கள் ரொம்ப பிடிக்கும். சற்றே கோமாளித்தனமாக இருந்தாலும் பிங்கோ சிப்ஸ் விளம்பரமும் பிடிக்கும்.
nice da.. Airtel ads are really good.. athavida un tamil romba azhaga irukku.. athuvum naan tamilathan ezhuthuvengra thimuru innum azhagu.. Tamila suvaikka marandha palaperla naanum oruthan.. bye..
நண்பா... Airtel மட்டும் இல்லை, vodafone- இன் விளம்பரங்களும் (குறிப்பாக அந்த exam hall tension- ல அந்த பொண்ணுக்கு அந்த பையன் ஒரு சொட்டு ink தருவானே) ரொம்ப நல்லா இருக்கு. ஆனா, விஜய் சொன்ன மாதிரி bingo advertisements- ஐ இதனோடு ஒப்பிட்டால் அவனுக்கு ஏழு ஜென்மத்துக்கும் பாவம் நீங்காது. அந்த advertisements எல்லாம் ஒரு advertisment- னு சொன்னாலே வெக்கக்கேடு.
Post a Comment