Wednesday, June 10, 2009

வாசகன்

ஒவ்வொரு ரயில் பயணத்தின்
முன்தினத்திலும் தவறாமல்
எடுத்துவைக்கப்படும் புத்தகங்கள்
பிரிக்கப்படாமலேயே ஊர்வந்தடைகின்றன..
அதைவிட சுவாரஸ்யமான
மனிதர்கள் வாசிக்கக்கிடைப்பதால்..

11 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ம்.... உண்மைதான் தம்பி. இப்படியே பல புத்தகங்கள் படிக்காமலேயே தங்கிவிடுகின்றன.

-ப்ரியமுடன்
சேரல்

Bee'morgan said...

ஆம் சேரா. தங்கி விடும் புத்தகங்கள் ஒரு வகையில் அன்றைய பயணத்தின் ஒரு அடையாளமாகிவிடுகின்றன.. பின்னொரு நாளில் அதே புத்தகம் நமக்கு அந்த பயணத்தையும் அதன் மனிதர்களையும் நினைவுபடுத்தத் தவறுவதில்லை.

சாணக்கியன் said...

சில பயணங்களில் நேரம் கிடைக்காமல் போய்விடுகிறது. ரயில் குறித்த நேரத்திற்கு வந்துவிடுகிறது ! அப்படி நேரம் கிடைக்காமல் போனால் அது ஒரு முழுமையான பயணம் எனக் கூறலாம்.. :-)

ரெஜோ said...

நன்று :-)

J S Gnanasekar said...

20 மணிநேர ரயில் பயணத்தில் தமிழ் மக்கள் ஒருவர்கூட அருகில் இல்லாமல் கொடுமையாக இருந்தது. கர்நாடகா கடைசியில் இரு தாய்மார்கள், என் வயதொத்த இரு பெண்கள், ஒரு நடுநிலைப் பள்ளி பொடியனுடன் ஏறினார்கள். வசவுச் சொற்கள் தவிர மீதி எல்லாம் தமிழ்தான்.

யூதர்கள், அசுரப் பிடியில் அழகுக்கொடி, கொஞ்சம் தேநீர் நிறைய வானம், பாரதியார் கவிதைகள் ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வைத்து, கடைசியாக The Year of My Indian Prince அட்டை தெரியும்படி படித்தேன். ரியாக்சனே இல்லை.

Upper berthல் ஏறிய அந்தப் பொடியனை என்வயதொத்த அவன் அக்கா கேட்டாள்: 'புக் வேணுமாடா?'
"வேணாம்".
அம்மா கேட்டாள்: "சரி தலகாணியாவது வெச்சுக்கோடா".

நான் சேலத்தில் இறங்கும்போது, The Year of my Indian Prince படித்து முடித்திருந்தேன்.

- ஞானசேகர்

பாசகி said...

Awesome!

Bee'morgan said...

@J.S.ஞானசேகர்:
//
அவன் அக்கா கேட்டாள்: 'புக் வேணுமாடா?'
"வேணாம்".
அம்மா கேட்டாள்: "சரி தலகாணியாவது வெச்சுக்கோடா".
//
உண்மைதான்.. ;)

Bee'morgan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாசகி.. :) தொடர்ந்து வாருங்கள்..

Bee'morgan said...

@சாணக்கியன் , ரெஜோ:
:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய், அழகா சொல்லியிருக்கீங்க.

Bee'morgan said...

@அமித்து அம்மா:
:)