
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நேற்றிரவு ரயில் பயணத்தில்தான் ஆனந்தவிகடனைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தஞ்சை சந்திப்பு ஹிக்கின்பாதம்ஸில்,
" என்ன, விகடன் 15 ரூபாயா?"
என நான் ஷாக் குடுத்ததற்கு, கடைக்காரர் விட்ட லுக்கிலேயே புரிந்து விட்டது..
' ஆகா, கைப்புள்ள.. லேட் ரியாக் ஷன் குடுத்துட்ட போல.. சைலண்டா எஸ்கேப்' னு வாங்கிட்டு வந்து புரட்ட ஆரம்பிச்சேன்.
பலப்பல மாற்றங்கள் விகடனில். நானும் கல்லூரிக்காலத்தில் ஆ.வியின் அதி தீவிர வாசகனாக இருந்தவன்தான். ஆனால், பணிக்கு வந்தபின், அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குன்றி குறைந்து, மங்கி மறைந்து விட்டது. அதன் பின் எப்போதாவது, வாய்ப்பு கிடைக்கையில் வாசிப்பதோடு சரி.
கொஞ்சம் பெரிய சைஸ், எல்லாபக்கமும் கலர்ஃபுல் என பளபளப்பாக இருந்தாலும், என் கவனத்தை ஈர்த்த முதல் விஷயம், எல்லா கட்டுரைகளிலும் தென்பட்ட தனிமனித அடையாளங்கள். கட்டுரை எழுதுபவரே நேரில் சொல்வது போன்ற நடை, அங்கங்கே சில இடைச்செருகல் கமெண்டுகளுடன், எல்லா கட்டுரைகளிலும் தென்பட்டது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், ஒரு ப்ளாக் படிக்கற
ஃபீல்.
இரண்டாவது, பக்கத்துக்குப் பக்கம் பரிசுப் போட்டிகள். இதை எழுதி அனுப்புங்க அதை வெல்லுங்க வகையறா. வாசகப் பங்கேற்பை அதிகப்படுத்தும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இது காலத்தின் ஒரு கட்டாயமாகக் கூட அமையலாம். இன்னும் கொஞ்ச நாட்களில், பல வாரஇதழ்கள் இதனைக் காப்பியடிக்கத் தொடங்குவது நிச்சயம். ஆனால், இதிலும், ஒரு எல்லையைக் கடந்தால், கல்லூரி ஆண்டு மலர் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. அந்த எல்லையை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டியது சீனிவாசன் கையில்தான்.
அடுத்து, முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளத்தை குறிவைத்து களம் இறங்கியிருக்கிது ஆ.வி. ஆனால், இளைஞர்களைக் குறிவைக்கிறேன் பேர்வழி என்று, நடுப்பக்கத்தில் தொப்புள் காட்டும் நடிகையை போடாமல், கன்டென்ட் விஷயத்தில் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
இது எல்லாத்துக்கும் மேல், கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா எதுக்காக தர்ராங்கனு தெரியல. ஒரு சில ஆண்டுகளுக்கு முன், குங்குமம் சகட்டு மேனிக்கு, 5 ரூபாய்க்கு வாங்குங்க 10 ரூபாய் மதிப்புள்ள பொருள் இலவசம்னு, இலவசம் காட்டியே விற்பனையில் முதலிடத்துக்கு வந்த போதும், கொஞ்சமும் நிதானம் தவறாமல், புத்தகத்தின் மதிப்பு அதன் உள்ளடக்கத்தில்தான் இருக்குன்னு நின்ன ஆ.வி யா இப்படி?
கல்லூரியில் ஒரு முறை, நண்பனுடன் ஒரு சவால். ஆ.வியில் ஒரு ஒற்றுப்பிழை கண்டு பிடிப்பதாக. அப்போதிருந்த என் இலக்கண அறிவிற்கு ஒரு வாரஇறுதி முழுவதும், அட்டைப்பக்கத்திலிருந்து, கடைசிப் பக்கம் வரை தேடியும், ஒன்றும் அகப்படவில்லை.
என்னதான் மாற்றங்கள் வந்தாலும், ஒரு இதழின் பெருமை அந்த தரத்தில்தான் இருக்கிறது. இனிமேலும், இருக்கும் என நம்புகிறேன்.
6 comments:
Rs.15? Wow.. I remember it being Rs.5, then Rs.6 and then Rs. 10...
ஹாய் பாலா
என் வலைப்பூவில் உனக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருக்கு. வந்து பார்க்கவும்
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)
அனுஜன்யா
பதிவு போட்டுட்டு தமிழ்மணத்திற்கு அனுப்ப மறந்துட்டீங்கனு நினைக்கறேன். நான் அனுப்பிட்டேன்.
நல்ல பதிவு..!! :))
அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க Sri.. என் வலைப்பக்கத்தில் ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக, கடந்த 7 மாதங்களாக என் பதிவுகள் எதுவும் தமிழ்மணத்தில் திரட்டப்படவே இல்லை. ஒவ்வொரு முறை 'இடுகைகளைப் புதுப்பிக்க' சொடுக்கும் போதும் அது 7 மாதங்களுக்கு முந்தையே பதிவில்தான் சென்று நிற்கிறது. பல முறை தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியும் சரியாகவில்லை. எப்படிக் களைவதென்றும் தெரியவில்லை. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க..
@Sri
//
நல்ல பதிவு..!! :))
//
நன்றி hein.. :))
ஆமா நான் கூட கவனித்தேன் அதை. எனக்கும் என்ன செய்யறதுன்னு தெரியலியே..!! :( சாரி..!! :(
Post a Comment