Thursday, July 23, 2009

கன சதுரம்

எங்கிருந்து தொடங்க.. என்னவோ யோசித்து எங்கெங்கோ தேடி, ஏறக்குறைய 3 வருடங்களுக்கு முன் தொடங்கியும் விட்டேன் இந்த வலைப்பூவை.
முழு மூச்சுடன் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.

இந்த மூன்றாண்டு கால எழுத்தில் நான் சாதித்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் உண்டென்றால் அது உறவுகள்தான். எத்தனையோ முகம் தெரியாத நண்பர்கள். எங்களுக்கிடையில் இருப்பது என்ன. ஏதோ ஒரு இழை.. ஒரே ஒரு ஒத்த உணர்ச்சி போதும். முரண்பட்டாலும் கூட போதும். எங்கிருந்தோ வந்து, வாழ்த்தி, வசைபாடி, திருத்தம் சொல்லி என்னை மென்மேலும் செதுக்கும் அந்த உறவுகள்தான் இந்த எழுத்தால் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.

அப்படித்தான் போன வாரம் திடீர்னு ஒரு நாள் அ.மு.செய்யது interesting blog னு ஒரு விருது குடுத்து நம்மளையும் புல்(லா) அரிக்க வைச்சுட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மேலும் படிக்க...

12 comments:

அ.மு.செய்யது said...

நல்ல தேர்வுகள் பாலா...

இப்படியொரு சுட்டி அறிமுகத்தில் தான் நான் உங்களை கண்டு பிடித்தேன்.

இங்கும் சில முத்துக்களை தேட வேண்டும்.

வாழ்த்துக்கள் உங்களிடமிருந்து விருது பெற்றவருக்கும் !!!

சேரல் said...

Hey Bala,

Your choices are really very different. Let me go through all these blogs. My best wishes to you and the people you have mentioned. Keep going :)

-priyamudan
sEral

அமிர்தவர்ஷினி அம்மா said...

கன சதுரம் - அழகான தலைப்பு,

ஒவ்வொரு வலைப்பூவிற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் இண்ட்ரொடக்‌ஷன் ஈர்ப்பாயிருக்கிறது.

நானும் நந்து f/o நிலா எழுதுவாரா என்று பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். எழுத கூட வேணாம் அவரோட குழந்தை ஃபோட்டோ புடிச்சு போட்டா கூட போதும். :)-

இன்னபிற வலைப்பூ அறிமுகத்திற்கும் நன்றி.

Bee'morgan said...

@ செய்யது: :)
நீங்க எப்பவுமே இப்படித்தானா, இல்ல இப்படித்தான் எப்பவுமே வா?
இவ்ளோ ஃபாஸ்ட்டா இருக்கீங்களே.. :)
பாருங்க பாருங்க.. உங்களுக்கும் சில முத்துகள் பிடிக்கலாம்..

Bee'morgan said...

@சேரல்:
நன்றி சேரா.. :)

Bee'morgan said...

@ அமித்து அம்மா:
அட ஆமாங்க.. :) அவர்தான் கேக்கவே மாட்டேங்கறார்.. இனியாவது வர்ராரான்னு பாக்கலாம்.. :)

Krishna Prabhu said...

உங்களுடைய புத்தகம் குறித்த விமர்சனம் படித்தேன். அருமையாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே. புத்தக அறிமுகத்திற்கு நன்றிகள் பல. தொடருங்கள்.

Bee'morgan said...

நன்றி கிருஷ்ண பிரபு.. :)

ரொம்ப சந்தோஷமாக உணர்கிறேன்..
'புத்தகம்' என்னை மேலும் பல புதிய மனிதர்களிடம் அழைத்துச்சென்றிருக்கிறது . தொடர்ந்து சிறப்பாகச் செய்ய முயல்கிறேன்.

இவையனைத்திற்கும் காரணகர்த்தாவான சேரலுக்கு என் சிறப்பு நன்றிகள்.. :)

Anonymous said...

அறிமுகத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி Bee'morgan :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

Bee'morgan said...

:) :)

நந்து f/o நிலா said...

ஹையோ ரொம்ப லேட்டா கவனிக்கறேங்க. ரொம்பவே சாரி. மறக்காம ஞாபகம் வெச்சுகிட்டு இருக்கீங்களே அதுக்கே மனமார்ந்த நன்றி. நிலா போட்டோவாச்சும் அப்டேட் பண்றேங்க சீக்கிரம். அதத்தவிற வேற என்ன எழுதுவதுன்னு தெரியறதில்ல.

ஞாபகம் வெச்சிருக்கும் அமித்து அம்மா உங்களுக்கும் ஸ்பெஷல் நன்றிங்க.

Bee'morgan said...

அப்பாடா.. :) ஒரு வழியா வந்துட்டீங்களா.. வாங்க வாங்க.. :)