
சோப்புக்குமிழ்கள் ஊதி விளையாடும்
சிறுபிள்ளையாய்
உன் பார்வைகளை விசிறிச்செல்கிறாய்
ஒவ்வொரு குமிழும் என் உலகையே
பிரதிபலித்தபடி யாருக்காகவுமில்லாமல்
மிதந்து கொண்டிருந்தது
விரும்பி விரும்பிச்சென்று
குமிழ்களை தொடவிரும்பும் சிறுவனாய்
இலக்கற்றலையும் உன் பார்வைப்புலத்தில்
பட்டுவிடத் தவிக்கிறேன் நான்
என்செய்வேன்,
விரல்தொடும் அக்கணமே குமிழுடைந்து
என் உலகமும் சிதறுகிறது
இன்னும் சிலமுறை குமிழ்களை
இழந்தபின்தான் புரிகிறது
என் உலகம் என் கைகளில் இருப்பதைவிட
உன் பார்வையில் இருப்பதனால்தான்
இன்னும் இருந்துகொண்டிருக்கிறது
8 comments:
எங்கயோ போய்ட்டீங்க மார்கன்... :-) மின்னிதழ் எதுக்கும் அனுப்பலையா?
நன்றி சாணக்கியன்.. :)
ம்ம்.. இல்லை. ஏனோ இம்முறை ஆர்வம் வரவில்லை..
// இன்னும் சிலமுறை குமிழ்களை
இழந்தபின்தான் புரிகிறது
என் உலகம் என் கைகளில் இருப்பதைவிட
உன் பார்வையில் இருப்பதனால்தான்
இன்னும் இருந்துகொண்டிருக்கிறது //
அருமை :-) Welcome Back.
நன்றி நண்பா :)
//என் உலகம் என் கைகளில் இருப்பதைவிட
உன் பார்வையில் இருப்பதனால்தான்
இன்னும் இருந்துகொண்டிருக்கிறது//
சூப்பர் கவிதைங்க.... வாழ்த்துகள்.
நன்றி குருபரன்.. :)
WoW!!!! ரொம்ப அழகான கவிதை மார்கன். ரொம்ப நாள் கழிச்சு உங்க தளத்துக்கு வந்தேன். நிறைய மாற்றங்கள்...அனைத்துக் கவிதைகளும் அருமை...
நன்றி உமா :)
நீண்ண்ண்ட நாட்களாக இணையம் பக்கமே வரஇயலாமல் இருந்தேன்.. படிப்பதும் எழுதுவதும் வெகுவாகக் குறைந்திருந்தன.. இப்போதுதான் மீண்டும் கொஞ்சம் ஆர்வம் பிறந்திருக்கிறது.. தொடர்ந்த வாசிப்பிற்கும் நன்றி :)
Post a Comment