
பஞ்சுப்பொதி சுமந்தபடி
ஊர்ந்துகொண்டிருந்த யானை,
நான்
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
உடல் குறுக்கி, துதிக்கை உயர்த்தி
ஒரு கோபுரமாய்ச் சமைந்தது
அந்த யானையின் படைப்பில்
என் பங்களிப்பும்
உண்டெனினும்,
அது காணாமல் போனதைப் பற்றிய
சஞ்சலங்கள் ஏதுமில்லை
என்னிடம்
புதிதாய் முளைத்த
கோபுரம் ஏற்படுத்திய
கிளர்ச்சி மட்டுமே
கல்பகாலமல்ல
கால் நிமிடம்தான்
கல்விழுந்த குளமென
சிறிய சலசலப்பில்
கோபுரம் சரிந்துவிழுந்து
தவழும் குழந்தையானது
அம்மாவிடம் அடம்பிடித்தும்
கிடைக்காத ஐஸ்க்ரீம்
ஆசையுடன் நான் நட்ட
பூச்செடி
சாகசங்கள் புரியும்
இரும்புக்கை மாயாவி
என் மனதுக்கு நெருக்கமான
அத்தனையாகவும் உருக்கொண்ட
அந்த மாயக்கம்பளம்
வெறும் வெண்மேகமென
உணர்ந்த ஒரு நாளில்
நான் வளர்ந்துவிட்டிருந்தேன்
10 comments:
:)
-ப்ரியமுடன்
சேரல்
கவிதை மிக அருமையானக இருக்கிறது...ரொம்ப புடிசிர்க்கு...
wow :-)இப்போ தான் படிக்கறேன் ...
எங்கயோ போய்ட்ட கண்ணா..! கவிஞனின் உளமும் உலகும் என்றும் அழகு..!
நன்றி நண்பர்களே :)
கவிதை மிக அருமை. gud.
regards
ram
www.hayyram.blogspot.com
வெறும் வெண்மேகமென
உணர்ந்த ஒரு நாளில்
நான் வளர்ந்துவிட்டிருந்தேன்
//
OH
கவிதை மிக அருமை
நன்றி பிரபு :)
கடைசி ஆறு வரிகளில் அடங்கி விடுகிறதே கவிதை!; மற்றவை போனஸ். படத்தேர்வும் கவிதை
அட.. ஆமாம். அலங்காரங்கள் தவிர்த்த அந்த ரத்தினச் சுருக்கத்திற்குத்தான் இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன்.
கருத்துக்கு நன்றி. :)
Post a Comment