Thursday, February 15, 2007

கிரேஸி மோகன்… அட ..? ..!


கிரேஸி மோகன்.. தமிழ் கூறும் நல்லுலகத்தில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பெயர். தமிழகத்து மக்களை நோய் விட்டு வாழச்செய்வதில் இவருக்கு பெரும்பங்கு உண்டென்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சமீபத்தில் பண்பலை ஒன்றில் இவரது பேட்டியைக் கேட்க நேர்ந்தது. பல சுவாரஸ்யமான தகவல்கள் வந்தாலும் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனக்கு முன்னமே தெரிந்த ஒரு விஷயத்தின் மற்றொரு பரிமாணத்தை அவர் சொன்ன போது, கிரேஸி தி கிரேட்..

‘அவ்வை சண்முகி' திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அத்திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்கான டிஸ்கஷன்- கமல், ரவிக்குமார், வாலி, கிரேஸி மோகன்.

சூழ்நிலை இதுதான். கணவனைப் பிரிந்து பிறந்த வீட்டில் வாழ்கிறாள் மனைவி. ஒரு நாள் அவள் வீட்டில் சுமங்கலி பூஜை நடக்கிறது. இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கணவனின் பெருமைகளை எடுத்துக் கூறி, கணவனுடன் வாழ்வதுதான் ஒரு பெண்னிற்கு அழகு என அறிவுரை கூறுமாறு பாடல் அமைய வேண்டும். அதிலும் குறிப்பாக தன் கணவனையே மறந்து விட்டவள் போல் இருக்கும் மனைவிக்கு அவள் கணவனை நினைவூட்டும் விதமாக பாடல் அமைய வேண்டும்.

மற்றொரு முன் குறிப்பு, படத்தில் கணவனின் பெயர் பாண்டியன். அனைவரும் அவனை பாண்டி என்றுதான் விளிப்பர்.

இந்த இடத்தில் கிரேஸி மோகன் சொன்ன ஒரு ஐடியாதான் இந்த பதிவுக்கே காரணம்..

அதாவது, பாடல் உண்மையில் கணவனின் பெருமைகளை எடுத்து கூற வேண்டும். (இது கூடியிருக்கும் மற்ற பெண்களுக்காக ) அதே சமயம் மறைமுகமாக கதாநாயகிக்கு அவள் கணவன் பாண்டியை நினைவூட்ட வேண்டும்.

அதன் படி அமைந்த பாடல் வரிகள் இதோ..

குங்குமத்தை வைப்பாண்டி
கொஞ்சிக் கொஞ்சி நிப்பாண்டி
கொண்டவன் போல் துணை யாரடி?
. . .
. . .
தூணுக்குள்ளும் இருப்பாண்டி
துரும்பிலும் இருப்பாண்டி
நம்பியவர் நெஞ்சில் நிற்பாண்டி..
. . .

இதனை முதல் முறை கேட்ட போது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஒரு கமெர்ஷியல் பட்தில் வரும் ஒரு பாடலில் இவ்வளவு நுணுக்கமான ஒரு விஷயமா?.. அட..?..!

7 comments:

வல்லிசிம்ஹன் said...

அடடே!!
ரொம்ப நன்றி முருகன்.
செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு.

உண்மையாகவே வியப்பூட்டும் நிகழ்ச்சி.
என்ன ஒரு கற்பனை வளம்!

துளசி கோபால் said...

அட! இப்பத்தான் கவனிக்கிறேன்.

k4karthik said...

அட.. சூப்பருங்க...

Anonymous said...

இது போல் making of a song, பாடலை கேட்பதை விட சுவையாய்
இருக்கும்.இந்த கோண்த்தில் கவனிக்கவேயில்லை. சுவாரஸ்யமாக்
இருந்தது.
நானானி

வால்பையன் said...

கிரேஷிமோகன் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்

பரிசல்காரன் said...

வாவ்!

இதுவரை கேட்காத தகவல்!

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பா!

Bee'morgan said...

@ பரிசல்:
என் அழைப்பை மதித்து வந்ததற்கு நன்றி பரிசல்.. :)

@ வால்பையன்:
அட.. ஆமாங்க ஆமாம்.. :)