
துப்பறியும் கதைகளில் தனக்கென தனியிடம் பிடித்த Sherlock Holmesகதைகள் காலத்தைக் கடந்து நிற்பவை. எழுதப்பட்டு 130 வருடங்கள் ஆகியும் இன்றைய இளம் தலைமுறைக்கதைகளுடன் போட்டியிடும் இவற்றை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது.
Sherlock Holmes-ன் நுண்ணறிவில் வசியப்பட்ட அவர் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி. உங்கள் கண்களுக்கு விருந்தாக...
செவ்வாய் தோறும் இரவு 9 மணிக்கு History Channel-ல் துப்பறிகிறார்.
குறிப்பாக, ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முந்திய இங்கிலாந்தை அதன் பழமை மாறாமல்- அந்த குதிரை வண்டிகள், ரயில் நிலையங்கள், வீடுகள் , உடைகள், சாலைகள் - என கொஞ்சமும் மாறாமல் பதிவு செய்திருக்கம் History Channel-க்கு ஒரு சபாஷ் போடலாம்.
பார்வையாளர்களை நிச்சயம் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி இட்டுச்செல்லும் மந்திர ஜாலம் இது.
பி.கு: சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மறு ஒளிபரப்பும் உண்டு.
1 comment:
ஆமாம்... 1எபிஸோட் லெயிருந்து நாங்கள் பார்க்கிறோம்..அதே போல..மிஸ் ப்ண்ணாம பார்க்கிறாது kane & Able .The book was fantastic.. the visual representation is equally facinating =d>
Post a Comment