கவிதைகள் மறுவாழ்வு மையம்


நீ அலட்சியமாய் தூக்கியெறிந்த
காகிதக் கோப்பையிலிருந்து
மனமுடைந்த கவிதைகள் சில
குதித்தோடிப் போயின
தற்கொலைக்கு..
நான்தான் சமாதானம் செய்து
அழைத்துவந்திருக்கிறேன்
நீ வருவாய் என..

கைவிடப்பட்ட கவிதைகள்
சங்கம் ஒன்று அமைக்குமுன்
வந்துவிடேன் சீக்கிரம்..!

8 comments:

bhupesh said...

அவள் இதழ் பட்டதுமே மோட்சமடைந்த கோப்பைகள் தானே அவை!

ரொம்ப உருகிருக்கப்பா....

Bee'morgan said...

:)

Abbasin Kirukkalkal said...

கோப்பையில மிச்சம் வச்ச தண்ணி
இல்ல காபி ,அவளோட ஹைர்பின்..
இத சேகரிச்சு வச்சு காதல் பண்ணினாங்க
இத வச்சு கவிதை எழுதவும் ஆரம்பிச்சிட்டீங்க
திருந்துங்கப்பா

சேரல் said...

:)

bhupesh said...

பால உருகன்?!

ரெஜோ said...

// இதுக்கு நீ இன்னொன்னு பண்ணிருக்கலாம் .. அவ சாப்ட்டு போனால்ல எச்ச இலை .. அது கழுவி frame பண்ணி மட்டிருந்தா .. அவனனவன் காதலிக்கு செலை வைப்பான் .. நீ எலை வச்சா மாதிரி இருந்திருக்கும் .. :-) :-) //

ரெஜோ said...

அழகான கவிதை :-)

ரெஜோ said...

// பால உருகன்?! //

ரொம்ப ரசிச்சேன் :-)