எங்கிருந்து தொடங்க.. என்னவோ யோசித்து எங்கெங்கோ தேடி, ஏறக்குறைய 3 வருடங்களுக்கு முன் தொடங்கியும் விட்டேன் இந்த வலைப்பூவை.
முழு மூச்சுடன் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.
இந்த மூன்றாண்டு கால எழுத்தில் நான் சாதித்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் உண்டென்றால் அது உறவுகள்தான். எத்தனையோ முகம் தெரியாத நண்பர்கள். எங்களுக்கிடையில் இருப்பது என்ன. ஏதோ ஒரு இழை.. ஒரே ஒரு ஒத்த உணர்ச்சி போதும். முரண்பட்டாலும் கூட போதும். எங்கிருந்தோ வந்து, வாழ்த்தி, வசைபாடி, திருத்தம் சொல்லி என்னை மென்மேலும் செதுக்கும் அந்த உறவுகள்தான் இந்த எழுத்தால் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.
அப்படித்தான் போன வாரம் திடீர்னு ஒரு நாள்
அ.மு.செய்யது interesting blog னு ஒரு விருது குடுத்து நம்மளையும் புல்(லா) அரிக்க வைச்சுட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் படிக்க...இந்த விளையாட்டுக்கு விதிமுறை ரொம்ப சிம்பிள். எனக்குப் பிடித்த இன்னும் ஆறு சுவாரஸ்ய பதிவர்களுக்கு இந்த விருதை கடத்தனும். :) அவ்ளோதான். கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.
இருந்தாலும், என் கடன் விருது கொடுத்து எஸ்கேப் ஆவதே.. எனக்குப் பிடித்த சுவாரஸ்யமான ஆறு பதிவர்கள் கீழே. இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எண்ணிக்கை கட்டுப்பாட்டினால் ஆறுடன் முடித்துக்கொள்கிறேன்.
சுற்றத்திலும் நட்பிலும் நிறைய சுவாரஸ்யமான பதிவர்கள் இருந்தாலும்,
இம்முறை, நான் இது வரை கண்டிராத அந்த முகம் தெரியா நண்பர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்.
இந்த மாய உலகம் தரும் சுதந்திரம் மிகப்பெரியது. எழுதுபவனின் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல், எழுத்துக்களை மட்டும் கொண்டுசேர்க்கும் வல்லமை இதற்குண்டு. அப்படி நான் ரசிக்கும் ஆறு பக்கங்கள் இவை. எல்லாம் ஒரே தளத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு கனசதுரத்தைப் போல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இருக்கலாம். ஆனால் நான் ரசிக்கும் பக்கங்கள் இவை.. உங்களின் பார்வைக்கு..
மனம் போன போக்கில்:இவரைப் பற்றி நான் அறிமுகம் கொடுத்தால் சரியாக இருக்காது. ஆனால், இவரின் வலைப்பதிவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கிட்டத்தட்ட இவரது நாட்குறிப்புகள்தான் இந்த வலைப்பூ. அபுனைவுகளை இத்தனை சுவாரஸ்யமாய் எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் எழுத்து இவருடையது. என்னை நோய்விட்டு வாழச்செய்வதில் சொக்கருக்கும் ஒரு பங்குண்டு. :)
ஒரு வகை சுய எள்ளலுடன் இவர் எழுதும் கட்டுரைகள் எப்போதும் என் ஃபேவரிட்.
கென்:ஹா..என்ன சொல்வது.. இவரின் புனைவுகளை புனைவுகள் என்று நம்புவது அத்தனை கஷ்டம். அப்படி ஒரு உயிர்புடன் எழுதும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். இவரின் வலைப்பக்கத்தி்ல் நான் படித்த அந்த முதல் பதிவு இன்னும் நினைவில் நிற்கிறது.
எனக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. இதனைப் படித்துவிட்டு இவருக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்திருப்பதாக ஏமாந்து போனோர் ஏராளம். கொஞ்சம் தீவிரமான பதிவர். இவரை உணர்ந்து கொள்ள இவரின் நிறைய பதிவுகளைப் படிக்க வேண்டும். படிச்சுப் பாருங்களேன்.
PKP:பல பூச்சி பூச்சியான விஷயங்களை அழகு தமிழில் விவரிக்கும் வாத்தியார் இவர். டெக்னாலஜி சம்பந்தமான அனைத்தும், கூடவே அவ்வப்போது சில தத்துவங்களும் நிச்சயம் கிடைக்கும் இங்கு. உங்கள் சந்தேகங்களுக்கும் விடை சொல்லும் ஆல் இன் ஆல் அழகுராஜா இவர். ஏராளமான பயனுள்ள தொடுப்புகள் இவர் பக்கத்தில் கிடைக்கும். இது ஒரு மினியேச்சர் தகவல் களஞ்சியம். up-to-date ஆ இருக்க இந்த பக்கத்தை தொடர்ந்து வாசிக்கலாம்.
உலகிர்க்கெல்லாம் ஒரே துப்பட்டி-ஆகாயம்.எனக்கு மட்டும் கவிதைபூபேஷ். ரொம்ப சாதாராணமான வார்த்தைகள் கொண்டு அசாதாரணமான கவிதைகள் புனையும் வித்தகர் இவர். எங்கெங்கோ அலையாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாக சொல்லும் கவிதைகள் இவரது. ரொம்ப நாட்களாக எழுதாமல் இருந்து இப்போதுதான் திரும்பவும் எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடருவார் என்று நம்புவோம்.
நந்து f/o நிலா:
இவரிடம் என்னை முதலில் ஈர்த்ததே அந்த பெயர்தான். நந்து f/o நிலா. தன் குழந்தை மீது அவர் கொண்ட காதல்தான் அவர் பக்கத்துக்கு போகும் முன்னமே எனக்குப் பிடித்தது. தேர்ந்த புகைப்படக் கலைஞர். நிச்சயம் ஒரு நடை போய் இவரின் படைப்புகளைப் பாருங்கள்.
நந்து சார், மறக்காம நிலாவுக்கு சுத்திப்போடுங்க.. :)
இவரும் ரொம்ப நாட்களாக எழுதாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் திரும்புவார் என்று நம்புவோம்.
தமிழ் காமிக்ஸ் உலகம்:வாங்க.. வாங்க.. இது நம்ம ஏரியா. இரும்புக்கை மாயாவியில் தொடங்கி கன்னித்தீவு வரைக்கும் எல்லா காமிக்ஸ் பற்றியும் கொசுவர்த்திப்பதிவுகள் நியாயமாகவும் தரமாகவும் இங்கு கிடைக்கும். என்னைக்காவது ரொம்ப டென்சனா இருந்தீங்கன்னா, இங்க வாங்க. "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" ன்னு சந்தோசமா பாடிக்கிட்டே திரும்ப போகலாம்.
---