Wednesday, March 07, 2007

உனக்காக... (என் முதல் கவிதை)


(தயவு செய்து கவிஞர்கள் மன்னிக்க..)

உனக்காக வார்த்தைகள் தேடி
வார்த்தைப்பஞ்சத்தில் அலைந்த எனக்கு
ஆறுதல் சொன்னது
ஒரு பூச்செடி.

உன் பெருமை பாடியபடி
அதன் கிளையில்
ஒற்றை ரோஜா
வசீகரமாய் சிரித்துக்கொண்டிருந்தது...

என்னைப்போலவே அலைந்து
கடைசியில் பூக்களுக்கு
கட்சி மாறிய
தன் கதையை சொல்லி
ஆறுதல் சொன்னது...
ம்ம்... அனுபவஸ்தன்தான்..

மனதைத் தேற்றியபடியே
திரும்பினேன்..
ஆறுதல் வேண்டி காத்திருந்ததது
ஒரு நந்தவனம்..

5 comments:

ஜி said...

கவிதை சூப்பருங்க... ஆனா புரியல...
புரிஞ்சா அது எப்படி கவிதையாகும்னு சொல்றீங்களா??? :)))))

Vilva said...

நானும் சென்றேன் அந்த பூச்செடியிடம்..
பதில் வந்ததா..? தந்த ரோஜாவிடமிருந்து..?
என்னை கேட்டது
"கேட்டுச்சொல்" என்று..!!
ஆறுதல் சொல்லிவிட்டு நானும் கள்வனானேன்..!!
- என் பூவை சிர்ப்பாள் பூவைக்கண்டு என்ற தைரியம்..!!

Anonymous said...

indha kavidhai enakku purinjidhu :-) ;-)

JAGANNATHAN CS said...

முதல் கவிதை அருமை......

இங்கே உங்களைப்போலவே அலைந்து பூக்களுக்கு கட்சி மாறியவர் யாரென்று தெரிந்து கொள்ளலாமா................?

என்றும் அன்புடன்
ஜெகன் சுசி.

Bee'morgan said...

நன்றி.. :-)
//
ஆறுதல் சொன்னது
ஒரு பூச்செடி
//