Saturday, October 06, 2007

அவளைப் போல் ஒரு கவிதை..!

பழனிபாரதியின் 'மழைப்பெண்' கவிதைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதை ஒன்றுண்டு.

அது,

"ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு
ஆணும் போதாது காதலுக்கு..
நிலா வேண்டும், மழைவேண்டும்,
மீன் வேண்டும், காடு வேண்டும்,
தும்பி வேண்டும், மழலை வேண்டும்,
மண்புழு வேண்டும்,
கவிதை வேண்டும்.. "

காதல் கவிதைகள் என்றால் கவிஞர்கள் செய்த காலவிரயம் என்று எண்ணியிருந்த எனக்கு மாற்றுக்கருத்து ஏற்பட உதவிய கவிதைகளில் இதுவும் ஒன்று.( இன்னும் பல உண்டு. அவற்றை பிறகு பார்க்கலாம்)


ஆனால், ஒன்று நிச்சயம். நானும் கொஞ்சம் காதல் எழுதவேண்டும் என்ற ஆவல் துளிர்விட்டது. இதோ நான் எழுதிய கொஞ்சம், இங்கே..

காதல் வந்தாலே, உலகியல் வரையறைகள் தகர்ந்து போவது சகஜம்தான். கவிதையும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் எழுதியதை கவிதைகள் என்று சொல்லமாட்டேன். காதல் பித்தில், சில பிதற்றல்கள்.. அவ்வளவே.. !! காதலின் தீண்டல் கண்டவர்களுக்கு இவை சுவைக்கலாம்..!!!

கவிதையை படங்களுடன் காண, இங்கே செல்லவும்..

  • பாடுபொருளாய்
    காதலைக் கொள்வேனென
    கனவிலும் நினைக்கவில்லை.
    நீ
    வந்தாய்..!
  • -------
  • உன்னில் பிறக்கும்
    கவிதைகளின்
    வளர்ப்புத்தாய்
    நான்..!
  • -------
  • என் கவிதைகளுக்கு
    முதலும் முடிவும்
    ஒரே புள்ளிதான்,
    முடிவிலியைப் போல,
    நீ..!
  • -------
  • எத்தனை அலை
    வந்து சொல்லிச்சென்ற
    பின்னும்,
    மிச்சமிருக்கின்றன
    கடலைப்பற்றிய கதைகள்,
    உன்னைப் பற்றிய
    என் கவிதைகளும்...
  • -------
  • நம்மில் அல்ல,
    நமக்கிடையே
    நிரம்பியிருக்கிறது,
    காதல்..!
  • -------
  • எழுதாமல் விட்ட வரிகள்தான்
    அதிகம் சொல்கின்றன..
    என் காதலை.. !
  • -------
  • தேவதைக் கதைகளை
    கேட்டதில்லை நான்..
    ....
    பார்த்திருக்கிறேன்..!
  • -------
  • என் கவிதைகளை
    அர்த்தமிழக்கச்செய்யும்
    அகராதி
    நீ..!
  • -------

3 comments:

SurveySan said...

good ones.

Anonymous said...

ஹ்ம்ம்ம்...

தம்பி, என்ன இதெல்லாம். நடத்து, நடத்து..
நல்லா இருக்கு.. ஆனா எங்க போய்கிட்டிருக்க மேன்? யார் அந்த தேவதை???

-தணிகா
பி.கு.: அறிந்தவன் அறிவிப்பு - பெண்கள் ஜாக்கிரதை!

MaYa said...

இந்த 'பால'முருகன்.. காதல் கண்டு.. 'முருகனாய்" வளரக் காண்பதில் மகிழ்ச்சி..! இன்னும் காதல் வயப்பட வாழ்த்துக்கள்..! இன்னும் கவிதையில் காதல் விழ எதிர்பார்ப்புக்கள்..! நல்தொடக்கம்..! வளர்க!