மெல்லிய பனி, கொஞ்சம் அதிகமாகவே குளிர், காலத்தைக் கடந்த தேவாலயங்கள், ராணுவக் குடியிருப்புகள், எரிச்சல் தரும் டிராஃபிக், தீப்பெட்டிக் குடியிருப்புகள், அடிக்கடி வரும் marketing Call கள் இவற்றோடு பெங்களுரென்றவுடன் தவிர்க்க இயலாத மற்றொன்று FM radio தாங்க..
நானும் ரொம்ப நாளாப் பாத்திட்டேன்.
எல்லா சேனல்லையும், கண்டிப்பா கன்னடப் பாட்டு போடுறாங்க.. ஹிந்தி பாட்டு போடுறாங்க.. ஆங்கிலப் பாட்டு போடுறாங்க.. தெலுங்குப் பாட்டு போடுறாங்க.. இவ்ளோ ஏங்க..? மலையாளப் பாட்டு கூட ஒரு முறை கேட்டிருக்கேன்.. ஆனா இன்னைய வரைக்கும் ஒரு முறை கூட தமிழ் பாட்டு கேட்டதில்லை..?
ஏன் இப்படி?
21 comments:
சத்தியமா இது ஒரு மொக்கையான கேள்விதான்...
சென்னையில் சூரியன் எப்.எம் / ரேடியோ மிர்ச்சியில் "அனிசிதரு நானோ நின்னோ" அப்படீன்னு கன்னடப்பாட்டு ஓடுதா என்ன ?
இருக்குற பிரச்சனை போதாதுன்னு,நீங்க புது பிரச்சனைய கிளப்பாதீங்கபா...!!!
அப்படி இல்ல ரவி.. சென்னையில எத்தன பேர் கன்னட பாட்டு கேப்பாங்கணு சொல்லுங்க.. ஆனா, அதுவே இங்க தமிழ் பாட்டு போட்டா, நீங்க கேப்பீங்களா? மாட்டீங்களா?
யாருப்பா அது பெங்களூர கொற சொல்றது...
சூடான இடுகைல அனுபவி அனுபவிக்கவிடு'ன்னு நம்ம ஊர் பெருமைகள எழுதியிருக்கேன் படிச்சிட்டு சரியா இல்லையான்னு சொல்லுங்க..
sry boss!!!
நான் இது வரைக்கும் பெங்களூர்ல எந்த FMம் கேட்டதில்ல ;)))
அது சரி. ஒரு திருவள்ளுவர் சிலையைத் திறக்கவிமாட்டேனுங்கிறானுங்க கன்னட வெறியனுங்க. இதுல தமிழ்ப்பாட்டு போட்டா தேடிப்போய் அடிப்பானுங்க.
ஓசூர்ல ஒரு தமிழ் FM ஸ்டேசன் ஆரம்பிச்சா தெரியும் சேதி. இங்க எல்லாப் பயலும் அதைத் தான் கேட்டுக்கிட்டுத் திரிவானுங்க.
கன்னட பாட்டு ஒலிப்பரப்புவதே இங்கே பெரிய விஷயம் இதில தமிழ் பாட்டா
அன்புடன்
அரவிந்தன்
ஓசூர்ல FM Station ஆ.. Idea ரொம்ப நல்லா இருக்கே.. :-)
அட நீங்க வேற...மெட்ராஸ்ல வெறும் தெலுங்குக்காரனுங்க தான் இருக்காங்க...
ஓசூர் எப்.எம் ஸ்டேஷன்...சூப்பர் ஐடியாங்னா !!!!!!!!!
ஆனா ஓசூர் வரைக்கும் வாட்டாள் நாகராஜ் ஆள் அனுப்பாம இருக்கனுமே ?
FM @ Hosur - This is what I have been thinking for a long time.
In fact, I was mentioning the same to one of my friend.
Radio mirchi/Suryan FM - why don't you give a try?
வருகைக்கு நன்றி செந்தழல் ரவி..
//ஆனா ஓசூர் வரைக்கும் வாட்டாள் நாகராஜ் ஆள் அனுப்பாம இருக்கனுமே ?//
ஆமாங்க..யார் அந்த நாகராஜ்?
நீங்க சொல்லுறது ஒரு குறைதான். அதில் 100% உண்மை இல்லை.
நான் ரேடியோசிட்டி எப் எம் பெங்களூருவில் - ஏஆர் ரகுமான் இசையில் வெளிவந்த
'காதல்வைரஸ்' படப்பாடலான 'ஏகே என்ன ஆச்சு உனக்கு' என்ற 100% அக்மார்க் தமிழ்ப் பாடலைக் கேட்டு இருக்கிறேன்.
ஏ.ஆர். ரகுமானின் இசையில் வெளிவந்த 'பாய்ஸ்' என்ற 100% அக்மார்க் ஐஎஸ் ஓ தமிழ்ப்படத்தின் 'சரிகம' என்ற பாடலை 'ரேடியோசிட்டி' பெங்களூரு பண்பலை வானொலியில் கேட்டுள்ளேன். இது அப்பட்டமான உண்மை. ஆனால் அவர்கள் தமிழ்ப் பாடல் போடும்போது நீங்கள் கேட்காமல் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
வேண்டுமென்றால் அந்த வானொலிநிலையத்தின் நிர்வாகிகளைக் கேட்டுப் பாருங்கள் - அப்போது தெரியும் நான் கூறுவது உண்மை என்று.
வாட்டாள் நாகராஜ் இங்கே பெங்களூரிலே இருக்கும் ஒரு கன்னட ஆதரவாளர் (தமிழ் வெறுப்போர் சங்கத்தலைவர்).
காவேரியில தண்ணீர் திறக்கக்கூடாது எனப் போராடும் ஒரு கன்னடக்காரர்.
வயது 50+ ஆனாலும் இன்னமும் சின்னப்புள்ள மாதிரி செயல்படுபவர்.
தலைப்பாகை எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர். கெல்மெட்டை ரோட்டில் போட்டு எரித்து - கெல்மெட் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்தியவர்.
இவர் ஒரு சுயேட்சை எம் எல் ஏ என்று நினைக்கிறேன்.
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி தமிழ்நெஞ்சம்.. நான் இதுவரை கேட்டதில்லை அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.. மத்தபடி ஒன்னும் இல்ல.. உங்கள நம்புறேங்க.. நிர்வாகியெல்லாம் கூப்பிட வேண்டாம்.. :o)
I had written long time back (year ?) to suntv/suryanfm to start one fm radio station in Hosur for tamil population of Bangalore. It will surely become a hit. There was no response. The reason could be that FM radio requires local (city) advertisements. The tamil or kannada or hindi establishments in Bangalore may not feel comfortable to give ads to Hosur FM station fearing these vatal nagaraj and co. Once a FM starts in Hosur with adequate coverage of Tamil and Kannada content there would be significant opposition from Kannada Rakshana Vedike and/or Vatal Nagaraj (the reason being the local ones in Bangalore may start loosing some ad revenue to this Hosur FM station).
Currently the RadioMirchi, AIR Rainbow, S FM etc are quite popular in Kannada circle than the Hindi stream Radiocity and other such junkies.
Another issue could be signal strength. The FM signal from Hosur may not be that clear beyond south bangalore areas due to landscape.
Hai
i just saw ur wish for Pa.Raghavan sir's "Nilamellam Ratham".
It is avail in http://nilamellam.blogspot.com
sorry to the publishers...
பெயர் தெரியா என் நண்பரே, தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. இப்பக்கத்தை நான் முன்பே கண்டிருக்கிறேன். கையில் ஒரு புத்தகத்துடன் மொட்டைமாடியில் அமர்ந்து அவ்வப்போது கடந்து செல்லும் சில ஒற்றைப்பறவைகளைக் கண்டவாறு மாலைவெயிலில் நனைந்து படிக்கும் சுகம், இந்த மானிடர் முன் அமர்ந்து படிப்பதில் வராது என்பது என் கருத்து.. நான் புத்தகமாகவே வாங்க ஆசைப்படுகிறேன்..
Dear Tamilians
Listen to kannada songs when you people are in Karnataka as Kannadigas in Tamil nadu listening to Tamil in Tamil nadu. This is how one can respect each other.
Also tell cinema distributers and theatre owners in Chennai, Hosur, Tamilnadu to distribute and screen kannada movies.
திருப்பதி மலையில் சென்னை சூரியன் எப்எம் தெளிவாகக் கேட்கும் போது ஓசூர் எப்எம் பெங்களூரில் கேட்காதா? :)
Anonymous தமிழன் said...
இருக்குற பிரச்சனை போதாதுன்னு,நீங்க புது பிரச்சனைய கிளப்பாதீங்கபா...!!!
repeateeee
தமிழ் நாட்டுல முதலமைச்சர், SUN TV, கலைஞர் TV எல்லாமே தெலுங்கு குடும்பம் தானே. ஓசூர்ல தமிழ் FM போடமாட்டாங்க. ஆனா ஓசூர்ல பெங்களூர் குப்பை கன்னட இந்தி பரவாயில்ல. கலைஞர் குடும்பம் நடத்துற RED FMல தமிழ் கிடையாது, இந்தி கன்னடம் தானே! தமிழ்நாட்டு CBSE பள்ளிகள் ல இந்தி திணிப்ப தட்டி கேக்க மாட்டங்கா. தூய தமிழ் பெயர் வேண்டிய படத்துக்க ஆங்கில பெயர் வெச்சி வரிவிலக்கு வாங்கு வாங்குவாங்க கலைஞர் குடும்பம். CLOUD NINE என்ன தமிழ் பெயரா?? இருந்தாலும் முதல்வர் மு க தான் உண்மையான 'தமிழர்' தான் . 'உண்மை' தமிழங்க இருக்கிற வரைக்கும் தமிழே ஒரு தமாஷ் நாடகம் தான்.
Post a Comment