Wednesday, March 05, 2008

கலிகாலம் என்று...



இன்றும்,
கைக்குழந்தையுடன்
பேருந்தில் ஏறும் பெண்களுக்கு
இடம் கொடுக்கும் நபர்கள்
இருக்கிறார்கள்..

அனாமத்தாய் கிடக்கும்
பணப்பைகள்
காவல் நிலையத்தில்
சேர்ப்பிக்கப்படுகின்றன...

மறதியாய்,
சில்லறை வாங்காமல்
திரும்புகையில்,
கூப்பிட்டுக் கொடுக்கும்
கடைக்காரர் இருக்கிறார்...

ஊர் பேர் தெரியாமல்
அடிபட்டுக் கிடப்பவர்கள்
மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்படுகின்றனர்...

பல மூன்றெழுத்து வார்த்தைகள்
அகராதிகளுக்கு அப்பாலும்
உயிருடன் இருக்கின்றன..

இவை எதற்குமே
திராணியற்றவர்கள் மட்டும்,
இன்னும்
சொல்லிக்கொண்டே
இருக்கிறார்கள்...
...

10 comments:

தோகை said...

அதே இன்றுதான்,
நிற்க முயன்று
மயக்கத்தில் விழும் பாட்டியை
பாட்டுக் கேட்டுக்கொண்டே
பார்க்கிறார்கள்..

சாலையோரத்தில் பேசிச் செல்லும்
நண்பனின் கையிலிருந்து
செல்பேசி
பறித்துச்செல்லப்படுகின்றது...

மறக்காமல்,
இரண்டை ஐந்தாகவும்,
ஐந்தை பத்தாகவும்,
'ரௌண்ட் ஆஃப்' செய்கின்றனர்
பேருந்திலும் ஆட்டோவிலும்...

அடிபட்டுக் விழந்தவனை
மருத்துவமனையில்
சேர்த்துவிட்டு வருவதற்குள்
வண்டியை திருடிவிடுகின்றனர்...

பல பல்லெழுத்து வார்த்தைகள்
நேரிலும், செய்தியிலும்
சிதறி இருக்கின்றன..

இவை எல்லாவற்றையும்
கேட்பவர்கள்,
ஏன்
சொல்லமாட்டார்கள்
இன்னும்...
...

Divya said...

Provoked positive thoughts about life & people!

Wonderful writing!!

Bee'morgan said...

ஆம் தணிகா.. அவர்களைப்பற்றியதுதான் இப்பதிவும்.. அவர்கள்தான் இன்னும் கலிகாலத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இருட்டு அறையில் தென்படும் ஒற்றை ஒளிக்கீற்றென தென்படும் சில நல்ல விஷயங்களை சுட்டிக்காட்ட முயற்சித்திருக்கிறேன். யார் கண்டார்? ஏணியேறினால் ஆலிஸின் அற்புத உலகமே நமக்காகக் காத்திருக்கலாம்.
இருட்டை கவனிப்பதை தவிர்த்து, ஒளியில் தெரியும் ஏணியை நோக்கிச் செல்வோம்..

தோகை said...

அடப்பாவி, அடப்பாவி, நாங்களாம் இருட்டப்பாக்கறவங்க போல ஒரு எஃபெக்ட் குடுக்கறயே..
இலக்கியம் - ஒளியைப் பற்றியும் எழுதும்; இருளைப் பற்றியும்..
ஆலிஸின் அற்புத உலகைப் பற்றியும் எழுதும்; நரர்பலர் போவதாக நரகத்தைப் பற்றியும்..
அதன் நோக்கு, பாத்திரங்களையும், நடந்த - நடக்கக் கூடிய செயல்களையும் உலகுக்கு எடுத்துரைக்கவே..
நல்லதைப் படிப்பவன், கெட்டதையும் படிப்பதே விழிப்புணர்வு..

Bee'morgan said...

அட விடு பாலா.. அதான் எல்லாத்தையும் பின்னூட்டத்தில் எழுதிட்டியே.. அப்புறமும் என்ன..? ஒத்துக்கறேன் நீ விழிப்போடதான் இருக்க.. :o)

Sabiyur said...

மற்றும் ஒரு கவிதை என்றுதான், நான் வாசிக்க ஆரம்பித்தேன்.. வாசிப்பின் முடிவில் உங்கள்நேர் போக்கு எண்ணமும் எழுத்தும் என்னை மிகவும் கவர்ந்தது

J S Gnanasekar said...

இரண்டு கவிதைகளும் அருமை. இருட்டுக்கானதும்; ஒளிகிகீற்றுக்கானதும்.

-ஞானசேகர்

anujanya said...

நல்ல கவிதை. தணிகா எழுதியது சரியான எதிர்வினை என்றாலும், இம்மாதிரி positive thoughts உள்ள கவிதைகள் குறைவு. ரசித்தேன் இரண்டையும்.

அனுஜன்யா

Venkata Ramanan S said...

Jus great!! migavum Rasithen :)

Bee'morgan said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணன் :)