Monday, August 25, 2008

Blogging Friends Forever


வலையுலகில் நான் அவ்வளவாக Active கிடையாது. எப்போதாவது நேரம் கிடைக்கையில் எட்டிப் பார்ப்பதோடு சரி.
போனவாரம் அனுஜன்யா வந்து, ஒரு இன்ப அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கு வலைப்பூவை வந்து பார்க்கவும் சொன்னப்போ எனக்கே கொஞ்சம் குழப்பம்தான்.எனக்கே இன்பமா? அதிர்ச்சியா இருக்கே னு வந்து பாத்தா, நம்மளையும் நம்பி BFF ( Blogging friends Forever) அப்டீனு ஒரு அவார்ட் கொடுத்துட்டாங்க. கூடவே சிலபல கண்டிசன்களும்*. அதையெல்லாம் அப்புறம், அதுக்கு முன்னாடி நான் இதை 5 பேருக்கு கொடுக்கனும். அந்த அஞ்சு பேர்,

1. ரெஜோ
என் உயிர்த தோழன், ரெஜோ ஒரு தீவிர படைப்பாளி. அவனின் படைப்பு வேகம் அசாத்தியமானது. எழுதிக் குவித்தவை ஏராளம். இணையம் காணாமல், காணாமலே போனவையும் ஏராளம். பலமுறை கேட்டுக் கொண்டும் இன்னும் blogger பக்கம் வரவில்லை. அவனின் multiply.com பக்கம்தான் மேலே கொடுத்திருப்பது. இவன் திறமைகளுக்கு ஏற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதே என் கருத்து. அற்புதமான அழகியல் கவிதைகள் இவனது. பலதரப்பட்ட உணர்வுகளைக் கிளறக்கூடியவை இவன் படைப்புகள்.

2. ஞானசேகர்
நான் அன்னாந்து பார்க்கும் ஒரு பதிவர். தேர்ந்த அறிவும், பரந்த உலக அனுபவம் செறிந்த படைப்புகள் இவரது. பெரும்பாலும், சோகத்தையும் அதன் வலியையும் வீரியம் குறையாமல் பதிந்து செல்பவை இவரது எழுத்துக்கள். இவரின் கவிதைகளை விட, சிறுகதைகளே எனது சாய்ஸ்.

3. ஜெகன்
சின்னச் சின்ன கவிதைகளில் பலப்பல உணர்வுகளாய், தன் எண்ணங்களைப் பாடும் கவிஞன். இவன் ஹைக்கூக்கள் என் சாய்ஸ்.

4. ராஜசேகர்
எனக்குப் பிடித்த ஆங்கிலப் பக்கம் இது. சிறு சிறு உரையாடல்களாய், நுண்ணிய உணர்வுகளைப் பதிவு செய்யும் இந்த உத்தி மிக அலாதியானது. மொழியின் லாவகங்களை நன்கு கையாளத்தெரிந்த எழுத்து நடை அழகு.
(அனுஜன்யா, தமிழ்ப்பதிவுகள் மட்டும்தான் போடனும்னு விதி ஏதும் இல்லையே..! :-) )

அப்பாடா, இது வரைக்கும் 4 நண்பர்களைப் போட்டாச்சு.. அடுத்ததா, என் வலைப்பக்கத்தின் சமீபத்திய விருந்தினர்,

5. சரவண குமார்..
வலைப்பக்த்தின் பெயரே, கவிதைகள் எனப்படும்.. பக்கம் முழுக்க திகட்டாத கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன.இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. படித்தசிலவும் ஒரு சோறாய் இனித்தன. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கவிதைசார்ந்த வலைப்பக்கங்களுக்கு சுட்டி கொடுத்துள்ளார். அனைத்து கவிதை சார்வலைப்பக்கங்களின் one stop 'கவிதை எனப்படும்'. கவிதைகளைத் தேடிப்படிப்போர் கண்டிப்பாய் காணவேண்டிய வலைப்பக்கம்.

என்னையும் மதித்து award கொடுத்த அனுஜன்யா இன்றிலிருந்து பாலாவுக்கு BFF கொடுத்த அனுஜன்யா அண்ணா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுவார். :) ( நான் இனிமே சுருக்கமா அண்ணா னு கூப்பிட்டுக்கறேன். அப்பாடா, இந்த link ம் கொடுத்தாச்சு) என்ன அண்ணா.. ஓகே வா?

* Conditions Apply:

1) நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..(சத்தியமா இந்த விளையாட்ட நான் தொடங்கல..)
2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்.. ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்..(என் தளத்திற்கு எல்லாருமே புதுசுதான்.. இருந்தாலும் விதியின் விளையாட்டு ஹ்ம்ம். மன்னிக்கவும் விளையாட்டின் விதிகள் அப்படி)
3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்

8 comments:

MSK / Saravana said...

மிக்க நன்றி.. ஆனால், நண்பர் அன்ஜன்யா தானே உங்களுக்கு இந்த அவார்டை கொடுத்திருக்கிறார்.. நண்பர் அனுஜன்யாவுக்கு கொடுத்தது, தோழி அருணா..
தோழி அருணாவுக்கு கொடுத்தது நான்..

நான் என்பங்குக்கு ஐந்து பேருக்கு கொடுத்தாயிற்று..
http://msaravanakumar.blogspot.com/2008/07/blog-post_30.html

இருந்த போதிலும் எனக்கு நீங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி..

MSK / Saravana said...

//5. சரவண குமார்..
வலைப்பக்த்தின் பெயரே, கவிதைகள் எனப்படும்.. பக்கம் முழுக்க திகட்டாத கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன.இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. படித்தசிலவும் ஒரு சோறாய் இனித்தன. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கவிதைசார்ந்த வலைப்பக்கங்களுக்கு சுட்டி கொடுத்துள்ளார். அனைத்து கவிதை சார்வலைப்பக்கங்களின் one stop 'கவிதை எனப்படும்'. கவிதைகளைத் தேடிப்படிப்போர் கண்டிப்பாய் காணவேண்டிய வலைப்பக்கம்.//

என் வலைபக்கத்தை பற்றி இவ்வளவு எழுதியதற்கு சிறப்பு நன்றிகள்..

J S Gnanasekar said...

சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

நன்றிகளுடன்,
- ஞானசேகர்

ஜியா said...

இந்த அவார்ட் ஸெரிமணிய விட உங்கள் மொழிவளம் அருமையா இருந்தது...

Unknown said...

:))

Bee'morgan said...

@ Saravana,
ஆகா, நீங்க எங்க எல்லாருக்கும் முன்னோடியா..? இப்போதான் கவனிச்சேன்.. ரைட்டு விடுங்க..
//
என் வலைபக்கத்தை பற்றி இவ்வளவு எழுதியதற்கு சிறப்பு நன்றிகள்..
//
உண்மையைச் சொன்னேங்க.. :)

Bee'morgan said...

@ ஜி
ஆகாகா.. ஜி, நீங்கள்ளாம் ரொம்ப பெரிய ஆளுங்க.. நீங்களே இப்படி சொல்றது எனக்குப் பெருமையா இருக்கு.. :)

RAJA said...

thanks da..