Monday, July 27, 2009

இன்னுமொரு பாதை


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

இன்றிலிருந்து இனிதே துவங்குகிறேன், இன்னுமொரு பாதையில் என் பயணத்தை.

நான் இதுவரை சந்தாதாரராக இருந்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்த புத்தகம் வலைப்பூவில் இனி நானும் பங்குதாரராகிறேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களின் ஒரு அறிமுகத்தை இந்த பக்கத்தில் இனி எழுதலாம் என்றிருக்கிறேன்.

நினைக்கும் போதே ஒரு பயம் கலந்த சந்தோஷம் உண்டாகிறது. என்னை இன்னும் பல புதிய மனிதர்களிடம் இட்டுச்செல்லும் இந்த புதிய பாதை. திடுதிப்பென்று களத்தில் இறக்கிவிடப்பட்ட சிறுவனின் படபடப்புடன், தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வும் சேர்ந்து, நான் கொள்ள வேண்டிய கவனத்தை இன்னும் அதிகரிக்கன்றன.

ஊக்கமும் உற்சாகமும் அளித்து, வழித்துணையென இப்பயணத்தில் என்னை இட்டுச்செல்லும் சேரலுக்கும் ஞானசேகருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இவர்கள் இருவருமாக இணைந்து 'புத்தகம்' வலைப்பூவிற்கென்று ஒரு அளவீட்டை முன்னமே ஏற்படுத்திவிட்டனர். இனியெழுதப்போகும் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால், அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அளவீடுகளைத் தொடர்வதே. என்னால் முடிந்த வரை இப்பணியை சிறப்பாகச் செய்ய விழைகிறேன்.

என்னுடைய முதல் பதிவு 'மெளனியின் கதைகள்' இங்கே.

இந்த பக்கத்திலும் உங்களின் நேர்மையான விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்..

நட்புடன்,
பாலா

11 comments:

அ.மு.செய்யது said...

அங்க போயி வாசிக்கிறேன்..வர்ட்டா !!

Bee'morgan said...

:) கண்டிப்பா..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் இதுவரை சந்தாதாரராக இருந்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்த புத்தகம் வலைப்பூவில் இனி நானும் பங்குதாரராகிறேன் //

வாழ்த்துக்கள்.

புத்தக விமர்சனம்னா பேயா அலையற ஆள் நான். ரொம்ப நன்றி பகிர்வுக்கு. மீதிகள் அங்கே !!!!!!

Bee'morgan said...

நன்றி அமித்து அம்மா.. :) அங்கும் சந்திக்கலாம்.. :)

bhupesh said...

பாலா, பட்டைய கிளப்பு!!

Bee'morgan said...

:)

priyamudanprabu said...

நீங்கதான ?!!?

படிச்சாச்சு
பின்னுட்டமிட்டாச்சு
தொடர்ந்து எழுதுங்க

priyamudanprabu said...

புத்தக விமர்சனம்னா பேயா அலையற ஆள் நான். ரொம்ப நன்றி பகிர்வுக்கு.

நானும்

Bee'morgan said...

:) நன்றி பிரபு.,. தங்களின் அன்புக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் :)

Unknown said...

/-- என்னை இன்னும் பல புதிய மனிதர்களிடம் இட்டுச்செல்லும் இந்த புதிய பாதை. --/

அந்த புதிய மனிதர்களில் நானும் ஒருவன்... உங்களுடைய 'மௌனியின் புத்தகம்' குறித்த பதிவு அருமை. மேலும் பல நல்ல புத்தகங்களுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி பாலா...

Bee'morgan said...

நன்றி கிருஷ்ணபிரபு.. :)