Wednesday, October 31, 2007

தமிழில் எழுத Google-ன் மந்திரப்பக்கம்

வலைப்பதிவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை, தமிழில் தட்டச்சுவது. என்னதால் feel பண்ணி பக்கம் பக்கமா எழுதினாலும், கடைசியில் பதிவிடுவதற்குள் டாவு தீர்ந்துவிடும்.. ( தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு..)

இணையத்திலும் பலவித உதவிப்பக்கங்கள் அங்கங்கே உள்ளன. என்னதான் இருந்தாலும் தமிழில் நேரடியாக தட்டச்சும் சுலபம் (அ) செளகரியம் கிடைப்பதில்லை.

இப்போது, Google -ம் இந்த களத்தில் குதித்திருக்கிறது. Google ன் மற்ற படைப்புகள் போலவே, வாய் பிளக்க வைக்கிறது. புதுமையான ஒரு முயற்சி. இப்பக்கத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சி தமிழில் பெற முடியும். இதுதான் எல்லா இடத்திலும் இருக்கிறது என்கிறீர்களா? அதுதான் இல்லை..

இப்பக்கம், ஒவ்வொரு எழுத்தாக எழுத்துரு மாற்றுவதற்குப் பதில் ஒவ்வொரு வார்த்தையாக மாற்றுகிறது. ஒரு வார்த்தைளை எழுதிய பின் space அழுத்தினால் மந்திரம் மாதிரி முதல் வார்த்தை மாறுகிறது. மிகப்பெரிய செளகரியம், அம்மா என்று எழுத Amma, Ammaa என எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அகராதிச்சொற்கள் மட்டுமல்லாது, பெயர்சொற்கள் ஊர்ப்பெயர்கள் எனப் பலவித சொற்களையும் எழுத்துப்பிழையின்றி எழுதமுடியும்.
( எ.கா) Tanjavur, Thanjavur, Thanjavoor, Tanjaavur, Thnjavur <--( 'a' missing. note this) என எப்படி எழுதினாலும் தஞ்சாவூர் கிடைக்கும். இது போன்ற சிறிய வேறுபாடுகளை, தானாகவே கண்டறிந்து சரிசெய்து கொண்டு விடுகிறது.. உண்மையிலேயே வலைப்பதி்வர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். முயற்சித்துப் பாருங்களேன்..
http://www.google.com/transliterate/indic/Tamil

பி.கு:
தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாலம் ஆகிய மொழிகளிலும்
இப்பக்கத்தில் தட்டச்சலாம்.

5 comments:

na.jothi said...

அருமையான மொழிபெயர்ப்பு பக்கம்
தகவலுக்கு நன்றி
-ஜோதி

வடுவூர் குமார் said...

பூய்வருகிரீன் - இது போய் வருகிறேன் என்று வரவேண்டியது.
சில இடங்களில் தடுமாறுகிறது.

na.jothi said...
This comment has been removed by the author.
Unknown said...

//வடுவூர் குமார் said...
பூய்வருகிரீன் - இது போய் வருகிறேன் என்று வரவேண்டியது.
சில இடங்களில் தடுமாறுகிறது.//

நீங்கள் அதற்கு puuy varukiReen என்று எழுதக்கூடாது. poy varukiren என்று எழுத வேண்டும். அது எளிமையானதும் கூட. குறைவான தட்டச்சை உடையது

Bee'morgan said...

தகவலுக்கு நன்றி நண்பரே.. முயற்சித்துப்பார்க்கிறேன்..