Thursday, February 07, 2008

சிறுகை அளாவிய தாள்

ஏதோ ஒரு மரண ஊர்வலத்திற்காக தூவப்பட்டு
சவத்தின் வாசம் சுமந்து
சாலையெங்கும் வாகனங்களால் அரைக்கப்பட்ட
தட்டைப் பூக்களை நினைவுபடுத்தியது

இன்று வாங்கிய க.பருப்பிற்கு
பொட்டலமாய் வந்த,
எங்கோ ஒரு சிறுகுழந்தை
ஆனா ஆவன்னா பழகிய
ஒற்றைக்காகிதம்.

10 comments:

Anonymous said...

arumaiya irukku

Bee'morgan said...

இப்பதிவுக்கு வரும் முதல் பின்னூட்டம் உங்களது.. உண்மையில் இது போன்ற வார்த்தைகளே என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகின்றன..
நன்றி கீதா..

Divya said...

ரொம்ப நல்லாயிருக்கு கவிதை!

வாழ்வின் யதார்த்தை உணர்த்துகிறது!

வாழ்த்துக்கள்!!

Bee'morgan said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்் நன்றி திவ்யா.. :-)

Anand R said...

சபாஷ்!!! அட!!! போன்ற வார்த்தைகளுக்கு வீரியம் இல்லை உன் கவிதைக்கு முன்னால்...

anujanya said...

நல்ல கற்பனை. வார்த்தைகளை இன்னும் சற்று செதுக்கலாமெனத் தோன்றியது.

அனுஜன்யா

Priyadarshini said...

eppodhavathu sila kavidhaigal eppavum manadhil nirkum endru thonrum.. adhu pondra oru kavidhai idhu..

Bee'morgan said...

@ அனுஜன்யா:
அண்ணா.. மன்னிக்கனும்.. இன்னைக்குத்தான் உங்களின் பின்னூட்டத்தைப் பாக்கறேன். ம்ம்.. இதற்கு மேல் எப்படி செதுக்குவதெனத் தோன்றவில்லை எனக்கு..( எல்லாம் சோம்பேறித்தனம்.. :o) )...
உங்களுக்கு ஏதாவது தோணுனா சொல்லுங்க.. :)

@ Ananad:
அண்ணா, உங்கள் கருத்துக்கும் நன்றி..

@ ப்ரியா:
இந்த வரிகள் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் நிச்சயம் மகிழ்வேன்.. வருகைக்கு நன்றி.. :)

JAGANNATHAN CS said...

வாழ்க்கையின் யதார்த்தத்தை கூறினாலும் ஒன்றுக்கொன்று (முரண்பாடான) தொடர்பில்லாத வரிகளாகவே தோன்றுகிறது எனக்கு.......


என்றும் அன்புடன்
ஜெகன் சுசி.

Bee'morgan said...

ம்ம்.. எனக்கு அப்படிப் படவில்லையே..! எதற்கும் இன்னொரு முறை படித்துப் பார்க்கவும்..
- - - - -
நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி ஜெகன்..