Monday, November 10, 2008

ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரின் கதை

இவன் என்ன பெரிய இவனா?

மனதுக்குள் சொல்லவொனதாத ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வந்தது.. அலுவலகத்தின் ஒரு மூலையிலமைந்த சிறிய டிஸ்கஷன் ரூம் அது. போதுமான இருக்கைகள் இருந்த போதிலும் 6 பேரும் நின்று கொண்டிருந்தோம்.

அதோ முன்சரிந்த தொப்பையம் வழுக்கைத்தலையுமாக என்னைப்பார்த்து குரைத்துக் கொண்டிருக்கும் ராஜிவ் தான் என் மேனேஜர். எங்களின் சந்தோஷத்தை கெடுப்பதற்கென்றே டெல்லியிலிருந்து வந்திருக்கும் 100 கிலோ அவஸ்தை. இன்று நான் டெலிவரி கொடுக்வேண்டிய Module-ல் இன்னும் மூன்று P1 issues. இரவுக்குள் முடிக்கவேண்டுமாம். அதற்குத்தான் இத்தனை அலம்பல்.

அவருக்கு குறைந்தது 40 வயதிருக்குமா? இருக்கலாம். கொஞ்சம் குள்ளம்தான். நல்லா புளி மூட்டை மாதிரி ஒரு தொப்பை. வழுக்கைத்தலையில் இரண்டு காதுகளுக்கு மேல் மட்டும் புதர் மண்டிய மாதிரி முடிக்கற்றைகள். அதில் ஒரு புற முடியை மட்டும் நீளமாக வளர்த்து மறுபுறம் நோக்கி படிய சீவி, வழுக்கையை மறைக்க முயற்சித்திருப்பார்.

மீட்டிங் முடிந்து வெளியில் வந்தவுடன், சீட்டுக்குப் பாகவே வெட்கமாய் இருந்தது.. இப்போது சீட்டுக்குப்போனால் துக்கம் விசாரிக்கிற மாதிரி ஆனந்த் கேட்கும் கேள்விகளுக்கு இவரே தேவலாம் என்று தோன்றும்.

மாடிக்குப்போய் ஒரு காபி குடிக்கலாம்.

“நேத்து ராத்திரி நைட் அவுட் டா.. 3 மணிநேரம் Dorm போயிட்டு, திரும்பிவந்து வேலை பாத்துகிட்டுருக்கேன்.. அவன் என்னமோ பெரிய இவன் மாதிரி கத்தறாண்டா..என்கிட்ட தனியாவாவது சொல்லியிருக்கலாம்.. எல்லாரும் இருந்தாங்கடா. பூஜா வேற இருந்தாடா.."

(பூஜா என்பது, சுமாராக இல்லாவிட்டாலும் கொஞ்சம் சூப்பராக இருக்கும் நார்த்தி பிகர் எனக் கொள்க)

“என்னடா பண்றது.. எல்லா மேனேஜரும் ஒரே மாதிரிதான் இருக்காங்க.. எனக்கும் ஒருத்தன் வந்து வாச்சிருக்கான்.. எங்கிருந்துதான் வர்ரானுங்களோ.." காஃபி டேபிளில் எழில் இருந்தான்.

“FS மட்டும் ஒழுங்கா இருந்திருந்ததா இதெல்லாம் எப்பவோ முடிஞ்சிருக்குன்டா.. அங்க போய் பம்ம வேண்டியது.."

“…"

“நாம பண்ற வேலைக்கு என்ன மதிப்பு இருக்கு சொல்லு?"

மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு மூலையில் அழவேண்டும் போல் தோன்றியது. சே.. சே.. இது ஆத்திரம் என்று தேற்றிக்கொண்டேன்.
உடம்புக்குள் போன் காபின் கொஞ்சமாக என் மனநிலையை மாற்றியிருந்தது. ஆனாலும் என் மேனேஜர் கமண்டலமும் நீரும் இல்லாமல் தொடர்ச்சியாக என்னிடமிருந்து சாபங்களைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

எங்களின் US டீமுக்கு காலைக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும். நம்மூர் கணக்கில் நள்ளிரவு 12.30க்குள்.
அரக்க பரக்க முடித்து ஒரு வழியாக ரிலீஸ் செய்த பின்தான் மூச்சே திரும்பவும் வந்தது. டைம் என்ட்ரி போட்டு இன்ன பிற சடங்குகளை எல்லாம் முடித்து Log Off செய்கையில்

“ஹே பாலா.." என்றொரு குரல்.

நிமிர்ந்தால் என் மேனேஜர்.

“கம் ஆன் மேன்.. என் கார்லையே ட்ராப் பண்ணிடறேன்.. வா.."

“இட்ஸ் ஓகே ராஜிவ்.. நோ பிராப்ளம்.. நான் கம்பெனி கேப்-லையே போயிக்கறேன்.."

“அட சும்மா வாப்பா.. நானும் அப்படித்தான் போறேன்.."

எனக்கும் சரியென்று பட்டது. நீங்கள் செய்தது தவறுன்னு அவருகிட்ட நேரடியாவே சொல்லிடனும்.. இதுதான் சான்ஸ்..
அலுவலகத்தின் கீழ் நான் காத்துக்கொண்டிருந்தேன். தன் வெர்னாவை எடுத்துக்கொண்டு வந்தார். கடந்த மாதம்மான் வாங்கிய கார். பளபளப்பாய் மின்னிது.. எல்லாம் எங்கள புழிஞ்சு எடுகுற காசுதான.. மின்னாம..?

சாலை வெறிச்சோடிக்கிடந்ததற்கு மிக மெதுவாகவே ஓட்டினார். ஏதோ ஒரு இந்திப்பாடலைப்போட்டவர் திடீரென ஞாபகம் வந்தவராய்,

“Oh. I am sorry" என்றபடி FM-ற்குத் தாவினார்..

பீவர் ஒன் ஓ போர் என அர்த்த ராத்திரியிலும் கத்திக்கொண்டிருந்தனர். சூரியனின் இனிய இரவு மாதிரி ஒரு நிகழ்ச்சி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என ஒரு நப்பாசை தோன்றி மறைந்தது.
திடீரென என் பக்கம் திரும்பி

“என் மேல உனக்கு கோவம்தான?" என்றார்..

நான் இந்த திடீர்த்தாக்குதலை எதிர்பார்க்கவில்லை..
சுதாரித்துக்கொண்டு,

“கோவம்னு இல்ல ராஜிவ்.. கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. ம்ம்..என்னாதான் இருந்தாலும், கடைசியில ப்ராஜெக்ட்தான முக்கியம்.." மண்ணாங்கட்டி ப்ராஜெக்ட்

“தட்ஸ் குட் மேன்.. என்ன பண்ண.. சில நேரங்களில் கடுமையா நடந்துக்க வேண்டியிருக்கு.. என் வேலை அப்படி.. "

FM-ஐ அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் மௌனமாய் எங்கள் பயணம் தொடர்ந்தது.

ரிங்ரோட்டை அடைந்தாகிவிட்டது.. இன்னும் 15 நிமிடங்களில் வீட்டுக்குப் போய்விடலாம். இப்போதே, படுக்கையில் சுகமாய் உறங்குவதைப்போல பிம்பம் கண்ணில் நிழலாடத்தொடங்கியது.

"Work is work.Life is life. ரெண்டையும் கொழப்பிக்காத.."

ஏன் என்னிடம் இதைச் சொல்கிறார். திரும்பவும் எரிச்சலாக வந்தது. இரண்டு நாட்களுக்கான தூக்கம் வேறு கண்களில் தேங்கிநின்று தலைவலியைத்தந்தது.

டேஷ்போர்ட் மீது சிலபல சாக்லேட்டுகள் சிதறிக்கிடந்தன. ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் நீட்டிவிட்டு அடுத்ததை மிக சாவகாசமாக இரண்டு கைகளாளும் பிரித்தவர், என் பதட்டத்தைப்பார்த்து விட்டு, கவலைவேண்டாம் என்பதைப்போல் சைகை செய்தார்.

“இது நான் போனதடவை அட்லாண்டா போயிருந்தப்போ வாங்கிட்டு வந்தது. “

எனக்கென்ன?

“I love this choco" உடன் அவரின் வாக்கியம் தடைப்பட்டது.

பாதிகடித்த அந்த சாக்லேட் தன் வாக்கில் கீழே விழுந்தது.. இவர் அவசரமாக கியர்மாற்றி, சாலையோரம் வண்டியை நிறுத்தினார்.

“என்னாச்சு ராஜிவ்?" என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே எனக்கு புரிந்து விட்டது.

அவரால் எதுவும் பேசமுடியும் என்று தோன்றவில்லை. தூக்கமுடியாத பளுவை தூக்குபவர் போலிருந்தது அவரது முகபாவம். ஒரு மாதிரி நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சீட்டில் சாய்ந்துவிட்டார். திடீரென்று அவர் முகம் முழுவதும் முத்து முத்தாக வியர்த்திருந்தது. கண்கள் முக்கால்வாசி மூடியநிலையில் மேலே எங்கேயோ சொருகியிருந்தன.

ஒரு கணம் எல்லாமே மறந்து, துடைத்து வைத்த கரும்பலைகை மாதிரி ஒரு உணர்வு.

நெஞ்சில் காதைவைத்துப்பார்த்தேன் நாடி இருப்பது போலவும் இல்லாதது போலவும் பாவ்லா காட்டி பயமுறுத்தியது.
முதலுதவி பற்றியெல்லாம் விவரம் பத்தாது எனக்கு.. ஒரு சில திரைப்படங்களிலிருந்து வந்த அறிவு மட்டும் அவர் நெஞ்சை அழுத்தச் சொன்னது.. அதுவும் அவ்வளவு எளிதாக இல்லை. என்னால் ஒரு இன்ச் கூட அழுத்தமுடியவில்லை. குத்தலாமா? குத்தினால் வலிக்குமா? வலித்தால் எழுந்து கொண்டு சண்டைக்கு வருவார் போன்ற அபத்தமான கற்பனைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு ஓங்கி குத்தினேன்.. எந்தவித சலனமும் இல்லை..

முருகா.. இரண்டாம் முறை. லேசாய் ஒரே ஒரு இருமல்.. மூன்றாம் குத்திற்கு ஒரு சிறிய அதிர்வு கொடுத்து முன்புறம் ஸ்டியரிங்கில் சாய்ந்துவிட்டார்.
யாரிடமாவது உதவிகேட்கலாமென்றால், நாங்கள் இருப்பது மகாதேவ்புராவுக்கும் கேஆர் புரத்துக்கும் இடையில் ஒரு பொட்டைக்காடு. கண்ணுக்கெட்டியதுரம் வரையில் ஒரு வீடும் கிடையாது.

உடனடியாக ஆனந்த் நம்பருக்கு கால்செய்தேன். புல் ரிங் போய் கட்டாகியது. என் அவசரம் புரியாமல் துங்கிக்கொண்டிருக்கிறான்.
கடவுளே.. என் கூட வரும்போதுதான் இப்படி ஆகணுமா..? அவருடன் இப்போது வந்ததில், இப்போது என்ன நடந்தாலும், நான்தான் தார்மீக பொறுப்பா..? எல்லாம் என் நேரம்.. இதற்குள், இந்த நவம்பர் மாத 15 டிகிரி பெங்களுர் இரவிலும் அவரை விட அதிமாக எனக்கு வேர்த்திருந்தது.

என்றோ சேமித்த ஜஸ்ட் டயல் நம்பர் நினைவுக்கு வந்தது. அவசரமாக போன்செய்து, மணிபால் நம்பர் நம்பருக்கு பேசினேன்.
அந்த நேரத்திலும் புத்துணர்ச்சியான ஒரு பெண்குரல். கேட்கவே கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார்.. இன்னும் 10 நிமிசத்தில அங்க வந்திடறோம். நீங்க அதே ரோட்ல இன்னும் ஒரு கிலோமீட்டர் போனா, விஜய் ஹாஸ்பிடல்ஸ் வரும். உங்களால முடிஞ்சா நீங்களே சீக்கிரமா அங்க போயிடுங்க சார்.. ஒவ்வொரு நிமிசமும் ரொம்ப முக்கியம்" என்று வயிற்றில் புளியைக்கரைத்தபடி போனை வைத்தார்.

இதற்குள் 5 நிமிடங்கள் கடந்திருந்தன.
டேஷ் போர்டிலிருந்த ஒரு சாக்லேட் கீழே விழுகையில்தான் கவனித்தேன். இன்ஜின் இன்னும் உறுமிக்கொண்டிருந்தது.

நானா.. சான்சே இல்லை... வாழ்க்கையிலேயே இதுவரை ஒருமுறைதான் கார் ஓட்டியிருக்கிறேன்.. அதுவும் 4 வருசம் முன்னாடி லைசென்ஸ் எடுக்கறதுக்காக ஓட்டுனது. எது கிளட்ச் எது பிரேக்குன்னே மறந்து போச்சு.. என்னால முடியாதுபா.

அதனால என்ன.. ஒரே ஒரு கிலோமீட்டர்தான். எப்படியாவது சமாளிச்சு உருட்டிகிட்டாவது போயிடலாம்.. முயற்சி பண்ணலாம் தப்பில்லை. உயிர்ப்பிரச்சனை என ஏதோ ஒரு அபிமானம் பேசியது.

என்னவானாலும் சரியென்று அபிமானம் பக்கம் சாய்ந்தேன்.

முதல் வேலை ஸ்டியரிங்கில் சாய்ந்திருக்கும் அவரை அப்புறப்படுத்துவது. அவரை நிமிர்த்தி உட்கார வைப்பதற்கே ஒரு குதிரை திறன் தேவைப்படும் போல் தோன்றியது. அவரை அப்படியே பக்கத்து சீட்டுக்குத் தள்ளி விட்டதில் ஒரு மாதிரி கோணலாக படுத்துக்கொண்டார். இன்னும் கால் கிளச் மீது இருந்தது.
அதையும் அப்புறப்படுத்தி, முதல் சில நுறு மீட்டர்கள் தட்டுத்தடுமாறி ஓட்டியபின்தான் நம்பிக்கையே வந்தது. அடுத்த மூன்றாவது நிமிடம் ஆஸ்பத்திரியில்.

அவசரமாக ஓடிச்சென்று ரிசப்சனில் சொன்னது மட்டும்தான் என்வேலை.

“அவரு உங்களுக்கு என்ன வேணும்"

“My Uncle."

“இந்த Form-ல கையெழுத்து போடுங்க.."

நான் போடும் முன்பாகவே அவர் ஐசியு-வினுள் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

என்ன செய்வதென்று தெரியாமல் தேமே என்று வெளியில் நின்றுகொண்டிருந்தேன். இதற்குள் நூறு முறையாவது அவர் பிழைக்கவேண்டுமென்று வேண்டியிருப்பேன். இன்று மதியம்தான் “இவனுக்கு ஏதாவது ஆவனும்" என்று மனதார வேண்டிக்கொண்ட ஒருவரின் உயிருக்காக இப்போது மன்றாடிக்கொண்டிருக்கிறேன். ம்ம்ம்.. விசித்திரமாய் இருந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் எண்ணங்கள் கடந்துகொண்டிருந்தன.

அப்போதுதான் கால் வந்தது.

“என்னடா மாப்ள.. என்னாச்சுடா.. இந்த நேரத்தில கால் பண்ணியிருக்க.. ஏதாவது பிரச்சனையாடா..?"

அடுத்த அரைமணியில் என் கூட இருந்தான் ஆனந்த். கொஞ்சம் தெம்பாக இருந்தது.

“அவர் வீட்டுக்கு சொல்லிட்டியாடா?"

“இன்னும் இல்லடா. அவர் வீட்டு நம்பர் இல்ல என்கிட்ட.."

“அவர் கார்ல ஏதாவது இருக்கும்.. வா போய்ப்பாக்கலாம்.."

அவரை தள்ளிவிட்டதில் விழுந்திருக்க வேண்டும்.. அவரது பிளாக்பெர்ரி காரினுள்ளேயே கிடந்தது.

அதன்பின் அவர் வீட்டுக்குச்சொல்லி, அவர்களும் வந்து, அவர் ஒரு வாரம் மருத்துவமனையிலும் இரண்டு வாரங்கள் மருத்துவ விடுப்பிலும் இருந்து, 3 வது வாரம்தான் அலுவலகம் திரும்பினார்.
பணிக்குத்திரும்பிய முதல்நாளே, அவரே வந்து

"We will go for Coffee " என்றார்.

"Sure" என்றபடி பின் தொடர்ந்தேன்.

“How are you now?"

“I am alright now. No worries" என்றபடி காஃபியை பருகத்தொடங்கினார்.

காஃபிக்குப் பிறகு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம்.

“என்னதான் இருந்தாலும் நான் அன்னைக்கு உன்ன அப்படி பேசியிருக்கக்கூடாதுல்ல.."

"Never mind Rajiv..Work is work. Life is life" என்றேன்..

தனியே வந்து சிரிக்கவேண்டும் போல் தோன்றியது.

--

டிஸ்கி:1: இந்த ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் செந்தழல் ரவியின் ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது (lol)
டிஸ்கி:2: ரவி மன்னிக்க :o)

35 comments:

ரெஜோ said...

Me the first ah ???!!!:-)

ரெஜோ said...

உன் pl க்கு டமில் படிக்கத் தெரியாதா ?? ஏண்டா கொஞ்சம் திட்டினார் அதுக்காக heart attack அளவுக்கு கொண்டு வந்துட்டயேடா .. ஹி ஹி ..

கதை சூப்பர் .. கடைசி வரைக்கும் சுவாரசியமா போச்சு .:-)

அந்த பூஜா IIT பொண்ணு தான ..so sad :-)

Bee'morgan said...

// Me the first ah ???!!!:-) //
ஆமாம்.. என்னாடா இவ்ளோ பாஸ்டா கீற.. :) ஓவர் வெட்டியா...?

// உன் pl க்கு டமில் படிக்கத் தெரியாதா ?? //
அவருக்கா..? டமிலா..? சான்சே இல்ல.. :o) நாங்கல்லாம் யாரு..?

// கதை சூப்பர் .. கடைசி வரைக்கும் சுவாரசியமா போச்சு .:-) //
நன்றி hein.. :)

// அந்த பூஜா IIT பொண்ணு தான ..so sad :-) //
ஷ்ஷ்.. பூஜா பத்தி no comments.. :)

Anonymous said...

வருணனைகள் நன்றாகவே வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

Bee'morgan said...

எழுதத் தெரிஞ்சவங்ககிட்டருந்து வரும் வார்த்தைகள், எனக்கு கெளரவம்.. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகில்.. :)

Anonymous said...

Hi,
'm very much willing to read some technology related stories from you. I believe only a writer can communicate exactly what he thinks and u r one among them.

ச.முத்துவேல் said...

இளமை,புதுமை என துள்ளலோடு நடை போட்டதில்,திடீர் திருப்பங்கள்,அதிர்ச்சிகள். எழுதியிருக்கும் விதம் அருமை.

Unknown said...

கதை(யா?) நன்றாக இருந்தது.. ;)))

Bee'morgan said...

@ முத்துவேல்:
நன்றிங்க.. தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் வார்த்தைகளுக்கும்.. :)

@ உமாஷக்தி
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. :) முழுக்க கற்பனைதாங்க. எந்தவித சந்தேகமும் வரக்கூடாதுன்னுதான் தலைப்பிலேயே கதைன்னு சொல்லிட்டேன்..

@ அனானி:
நீங்க யாரோ? எந்த ஊரோ என்ன பேரோ? இருந்தாலும் ஆசைப்பட்டு கேட்டுருக்கீங்க (இந்த ஊர் இன்னமும் நம்மள நம்புதே..!).. முயற்சி பண்றேன்.. :)
தங்களின் கருத்துக்கு நன்றி.. :)

MSK / Saravana said...

சொந்த கதையா.. திட்டின PM-க்கு ஹார்ட் அட்டாக் வர வச்சிட்டீங்களே..

ஆமா.. பூஜா யாரு..?? ;)

MSK / Saravana said...

ரொம்ப நல்லா இயல்பா இருந்துது.. :)

Bee'morgan said...

அய்யய்யோ சரவணா, அதெல்லாம் எதுவும் இல்லை.. பேசாம இன்னும் ஒரு டிஸ்கி சேத்துடறேன்.. ”இக்கதையில் வரும் சம்பவங்கள் பெயர்கள் யாவும் கற்பனையே” - ன்னு.. :)

பெங்களுர் பக்கம் ஒரு எட்டு வாங்க.. நேர்லையே காட்டறேன்.. ;)

//ரொம்ப நல்லா இயல்பா இருந்துது.. :)//
அப்பாடா.. நன்றி.. :)

Vilva said...

அம்பி! கலக்கறேள்..போங்கோ..!

Bee'morgan said...

எல்லாம் உங்கள மாதிரி பெரியவாள் அனுக்கிரகம்.. :)

Unknown said...

அன்புள்ள Bee'மோர்கன்,

உங்கள் வலைக்கு முதல் முறையாக வருகிறேன் .தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்.
நீங்கள் வந்து நெறைய பாராட்டி உள்ளீர்கள் .இந்த கதையை விட "புறா" அற்புதம்.நன்றாக
எழுதபட்டுஇருக்கிறது .பாசாங்கு இல்லை. மனதை விட்டு அகலவில்லை

ஆனால் அதில் " அந்தப்புகைப்படத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருப்பார்" கதை முடிந்து
விடுகிறது. . நறுக் என்று முடிக்க வேண்டும். மனதில் பதியும்.

குக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் . .முதலில் ஒரு மெலிதான உஸ் .பிறகு மூணு பெரிய விசில் .சின்னதாக்கி ஒரு சிறிய விசில் .பிறகு இறக்கிவிட வேண்டும்.இதை கடைபிடியுங்கள் .எடுப்பு,தொடுப்பு, முடிப்பு வந்து கதை கச்சிதமாக இருக்கும்.

.நானும் பல வருடம் மாஞ்சு மாஞ்சு எழுதி எழுதி அனுபவத்தில் கற்றுக்கொண்டேன் .
..
என்னுடைய "வாரணம் ஆயிரம் போட்ட "கதையை படித்து கருத்து சொல்லுங்கள. என் நண்பர் ஒரு கடைசி வரியை சேர்க்க சொன்னார்.நான் மறுத்து விட்டேன்.அது என்ன வரி?
படியுங்கள்

நன்றி.

anujanya said...

பாலா,

நல்ல விறுவிறுப்பு. பெரிய நீதி, அதிரடி திருப்பம் என்ற அசட்டுத்தனங்கள் முயலாததே இந்த கதையின் சிறப்பு. உன் PM உருவத்திலும், குணத்திலும் என்னைப்போல இருப்பார்போலும். நான் தப்பித்தேன்.

வாழ்த்துக்கள் பாலா. கலக்கு.

அனுஜன்யா

Bee'morgan said...

@ரவிசங்கர்:
வருகைக்கும் கருத்துக்கும் நீண்ட குறிப்புகளுக்கும் நன்றி நண்பரே..!
உங்களின் அனுபவக்குறிப்புகள் எனக்கு மென்மேலும் உதவும். அடுத்த முறை எழுதும் போது கருத்தில் கொள்கிறேன்.
--
உங்களின் வாரணம் ஆயிரம் போட்ட கதை பார்த்தேன்.. இன்னும் படிக்கவில்லை.. கூடிய விரைவில் படிச்சுட்டு சொல்றேன்.. அழைத்தமைக்கு நன்றி.. :)

Bee'morgan said...

@ அனுஜன்யா அண்ணா:
:) :)
உங்களை நான் நேரில் பார்த்ததில்லையே..! ஒரு வேளை பார்க்கும் போது 6 வித்தியாசம் இருக்கா இல்லையான்னு சொல்றேன்.. :)
பயப்படாதீங்கண்ணா.. எல்லாம் கற்பனைதான்..

logu.. said...

ச.முத்துவேல் said...
இளமை,புதுமை என துள்ளலோடு நடை போட்டதில்,திடீர் திருப்பங்கள்,அதிர்ச்சிகள். எழுதியிருக்கும் விதம் அருமை.

rippeeeetttungaaa...

Bee'morgan said...

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க லோகநாதன்.. :-)

Sandy said...

Really superb da.. I like the way you wrote it. Awesome :)

PS: Sorry that I don't know how to type in tamil.

Bee'morgan said...

thanks da Sandeep..! :)
தமிழ்ல எழுதறது ரொம்ப ஈசி டா.. இதை முயற்சி பண்ணிப் பாரு..
http://www.google.co.in/transliterate/indic/Tamil

Sandy said...

மிக்க நன்றி நண்பா :)

Bee'morgan said...

:-)

Anand R said...

நண்பா...
* உன் படைப்புகளில் உள்ள நேர்த்தி இதில் சற்று குறைவாகத் தோன்றியது...
* நீ உபயோகித்த சுருக்கெழுத்துக்கள் சிலவேயாயினும் கணிப்பொறி வல்லுனன் அல்லாத எனக்கு புரியவில்லை... (உம். FS)
* மிக மிக விறுவிறுப்பாகக் கொண்டு சென்று,
எல்லா கதைகளிலும் வருவதுபோல் வில்லன் திருந்துவதாய் காண்பித்து,
உடன் இரண்டு டிஸ்கி-யும் கொடுத்து
ஒரு பெரிய "சபாஷ்" பெறுகிறாய்...

Anand R said...

ஒரே வருத்தம்... பிள்ளைத் தமிழ் பிழைத் தமிழாய்க் காணப்பெற்றது... தயவு கூர்ந்து தமிழை வதைக்காதே...

CeLL said...

Super da ED puli :)

Bee'morgan said...

@ cell Karthick:
ம்ம்.. யாருப்பா அது.. தம்பீ செல் கார்த்திக் ஆ. வந்து கருத்து சொன்னதுக்கு சந்தோசம். மகிழ்ச்சி.. :)

After so long, it is really good to see you here da..

அந்த பேரை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.. ;)

Bee'morgan said...

@ Anand R:
நேர்மையான கருத்திற்கு நன்றி அண்ணா..அடுத்த முறை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன்..

சுறுக்கெழுத்துகள் இக்கதையின் ஓட்டத்திற்கு தடையிடா வகையில் அமைந்ததால், இந்த அளவே இக்கதைக்கு போதுமானதாகத் தோன்றியது.. FS ன் விளக்கம் தெரியாவிட்டாலும், வந்த இடம் பொருள் பொறுத்து அதன் ஏவல் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

பாராட்டுக்கும் நன்றி அண்ணா.. :)

ஆதித்தன் said...

//இன்று மதியம்தான் “இவனுக்கு ஏதாவது ஆவனும்" என்று மனதார வேண்டிக்கொண்ட ஒருவரின் உயிருக்காக இப்போது மன்றாடிக்கொண்டிருக்கிறேன். //

நம் கையில் எதுவும் இல்லை என்பதை மீளவும் உணர்த்துகின்றன உங்கள் வார்த்தைகள்.

நல்ல பதிவு.

Bee'morgan said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதித்தன்

ஜெகதீசன் said...

நல்ல எழுத்து நடை, வாழ்த்துக்கள்.

Bee'morgan said...

முதல் முறையா வந்து வாழ்த்தியிருக்கீங்க.. நன்றி ஜெகதீசன்.. :)

karthikeyan said...

gud story, It remembers me the Kumudam "oru pakka kathaikal".

Bee'morgan said...

நன்றி கார்த்திகேயன்.. :) இருக்கலாம்.. எல்லாம் தற்செயல்தான்.. :P